மேக் இன் இண்டியா- வேலைவாய்ப்பை அதிகரிக்கும்: இந்திரா நூயி

indira-nooyi கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “மேக் இன் இண்டியா’ திட்டம், உள்நாட்டின் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் என்று பெப்ஸிகோ தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான இந்திரா நூயி கருத்து தெரிவித்தார். கொல்கத்தாவில் சனிக்கிழமை நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திரா நூயி, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள “இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம், நாட்டில் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதோடு, வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் நல்ல திட்டமாகும். இந்தியாவில் 2020-ஆம் ஆண்டுக்குள் ரூ. 33,000 கோடி மதிப்பிலான முதலீடுகளைச் செய்வோம் என 2013ல் அறிவித்தோம். அதன்படி, ஆந்திரத்தில் பெப்ஸி அமைத்து வரும் புதிய ஆலையின் முதல் தளம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய குளிர்பான ஆலை இது. இந்த ஆலையை அமைக்க முதல் கட்டமாக ரூ. 1,200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.