
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பாரத ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று நடந்த சன்டையின் போது மதியழகன் காயமடைந்தார். காயமடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மதியழகன் இன்று உயிரிழந்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி வெத்தலைகாரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து (ஹவில்தாராக) பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ஜம்மு காஷ்மீர் சுந்தர்பண் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுள்ளது. இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையின்போது, குண்டு பாய்ந்து மதியழகன் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்து விட்டதாக நேற்று இரவு 9 மணி அளவில் அவரது மனைவி தமிழரசிக்கு ராணுவ அதிகாரிகள் தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மதியழகனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்தெரிவித்துள்ளார். மேலும், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.