சென்னை:மீனவர்களை சுட அதிகாரம் இருப்பதாக கூறுவதா?: ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுக் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும். நேற்றைய தினம் இலங்கைப் பிரதமர் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் எல்லைத்தாண்டி வருபவர்களை சுட்டுக் கொள்வதற்கு இலங்கை கடற்படையினருக்கு அதிகாரம் இருப்பதாக தான் ஏற்கனவே கூறியிருந்ததில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இது அவரது அதிகாரவர்க்கத்தைக் காட்டுகிறது. இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழக மீனவர்கள் தங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்த இந்தியப் பிரதமரின் இலங்கைப் பயணம் கேள்விக்குறியதாக அமைந்திருக்கிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம், மீனவர்களை இலங்கை கடற்படை துன்புறுத்தவோ, கைது செய்யவோ கூடாது என்பதை உறுதிபடக் கூற வேண்டும். இந்தியப் பிரதமர் இனியும் காலம் தாழ்த்தாமல் இலங்கை அரசை கடுமையாக கண்டிப்பதோடு, தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்காமல் இருக்க, இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை நிறுத்த, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழிலை பிரச்சினைகளின் தொடர மத்திய அரசு வழி வகுத்து தர வேண்டும்.என ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரனில் விக்ரம சிங்கேவுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Hot this week