ஏப்ரல் 21, 2021, 9:49 காலை புதன்கிழமை
More

  2 கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம்! லைவ் வில் இணைய இதோ லிங்க்!

  murugar

  ஜூலை 26ந்தேதி உலகம் முழுதும் இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயணம் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக வாழும் கலை அமைப்பு அறிவித்துள்ளது.

  இது குறித்து ‘வாழும் கலை’ அமைப்பின் அறங்காவலர், மோகனசுந்தரி ஜெகநாதன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தாமோதரன், சசிரேகா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு தமிழ் ஹிந்து குடும்பத்தின் ஒரு பகுதியாக அன்றாடம் வழிபாடுகளில் பக்தியுடன் கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது.

  vel-1

  உடலின் வெவ்வேறு பகுதிகளை, தியானம் மூலம் உயிர்ப்பிப்பதோடு, பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குணமடைய செய்கின்ற வலிமையை பெற கந்த சஷ்டி கவசம் உதவி செய்கிறது.

  இதன் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளவும், மக்கள் நோய் நொடியில் இருந்து விடுபட வேண்டியும், இரண்டு கோடி முருக பக்தர்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சியானது வரும், 26ல், சஷ்டி திதியன்று இணையதளம் வாயிலாக நடைபெறும்.

  vel

  பாடல் நிகழ்ச்சிக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகிக்கிறார். சமூக ஊடகங்கள் வழியாக, நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது, மிக பிரமாண்ட ஒரு ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழ போகிறது.

  murugar-2

  இதில் பங்கு கொண்டு பாராயணம் செய்ய இணைய விரும்புவோர், ‘பேஸ்புக் லைவ்’ bit.ly/FBKavacham, ‘யூ டியூப் லைவ்’ bit.ly/YTKavacham ஆகிய முகவரிகளை டைப் செய்து, உள்ளீடு மூலமாக நுழையலாம். மேலும் விபரங்களுக்கு, வாழும் கலை அமைப்பு பிரதிநிதிகள், தாஸ், 94433 56249, வெங்கடேஷ் 94433 70608 ஆகியோரின் மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என்று தெரிவித்துள்ளனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »