December 6, 2024, 3:39 PM
31.3 C
Chennai

நிதியமைச்சரிடம் கத்தி முனையில் கொள்ளை அடித்த ரயில் கொள்ளையர்கள்

மத்தியப் பிரதேச நிதி அமைச்சரிடமே கத்தி முனையில் ரயில் கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர். தில்லி செல்லும் ஜபல்புர் – நிஸாமுதீன் விரைவு ரயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த மத்தியப் பிரதேச நிதியமைச்சர் ஜெயந்த் மல்லையா, அவரது மனைவி சுதா மல்லையாவை கத்தி முனையில் மிரட்டி நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். இந்தத் தகவலை உறுதி செய்துள்ள சுதா மல்லையா, இந்தக் கொள்ளைச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். ரயிலின் ஒவ்வொரு பெட்டிக்கும் காவல்துறை பாதுகாப்பு போடுவது என்பது நடைமுறைக்கு வராது என்றாலும், ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |
ALSO READ:  Ind Vs Ban T20: தூள் கிளப்பிய பாண்ட்யா; இளம் இந்திய அணியின் வெற்றி!
விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week