― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாமதத்தின் பெயரால் கலவரத்தில் இறங்கி… அப்பாவி ‘இந்து தமிழர்’களை நிர்மூலமாக்கிய எஸ்டிபிஐ., கட்சியினர்!

மதத்தின் பெயரால் கலவரத்தில் இறங்கி… அப்பாவி ‘இந்து தமிழர்’களை நிர்மூலமாக்கிய எஸ்டிபிஐ., கட்சியினர்!

- Advertisement -
bangalore-riot2s

பெங்களூரில் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்தவர்களின் அழைப்பின் பேரில் திரண்ட இஸ்லாமியர்கள் செய்த கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது ஏழை தமிழர்கள்தான். அவர்கள் சிறுக சிறுக சேர்த்த எல்லாப் பொருள்களும் நாசமாகியிருக்கிறது. ஆனால் தமிழக கட்சிகள் எல்லோரும் வாய்மூடி மௌனமாக இருக்கிறார்கள். கன்னடன், மலையாளி, தெலுங்கன் என்றால் நெஞ்சை நிமிர்த்துபவன் எல்லாம் இப்போது நடுநடுங்கிக் கிடக்கிறான்.

கருத்து சுதந்திரம், தலித் எழுச்சி, தமிழர் வீரம், திராவிடம் எல்லாம் யாரின் முன்னால் மண்டியிட்டு கிடக்கிறது என்பதை இனிமேலாவது உணர்வுள்ள ஹிந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும்..

தமிழர்கள் பலர் பட்ட சிரமங்களை ஊடகங்களில் கொட்டித் தீர்த்துள்ளனர். அவற்றில் சில உள்ளக் குமுறல்கள் இவை…

bangalore-riot1

பெங்களூரில் பேஸ்புக் பதிவு ஒன்றில் பிரதமரையும், இந்துக் கடவுளரையும் ஸ்ரீகிருஷ்ணரையும் இசுலாமியர் ஒருவர் கேவலப்படுத்தி சித்திரிக்க, அதனால் கோபமடைந்த நவீன் என்ற இளைஞர் பதிலுக்கு இஸ்லாமிய தூதர் குறித்த செய்தியை பகிர்ந்திருக்கிறார். ஆனால், இதனை அரசியல் ரீதியாக அணுகி, வன்முறைகளின் மூலம் வெறுப்பைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைத்த எஸ்டிபிஐ., கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், மத உணர்ச்சியைத் தூண்டி நாள் முழுதும் சமூகத் தளங்களின் வழியே முஸ்லிம்களைத் திரட்டி, செவ்வாய்க்கிழமை இரவு, இந்த பதிவுக்கான நவீன் என்ற இளைஞரின் மாமா புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி, அவரது சகோதரி ஜெயந்தி ஆகியோரின் வீடுகளை மூர்க்கத்தனமாக தாக்கினர்.

அவர்களின் வீடுகள் மட்டுமல்லாது, 3 காவல் நிலையங்கள், அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இதுதவிர அங்கு வாழும் பொதுமக்களின் வாகனங்களும், வீடுகளும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன. ஒரு தனிநபர் வன்மத்தை காரணமாகக் கொண்டு, சுற்றி இருந்த தமிழர்கள், ஏழைகள் என அனைவரின் பொருள்களும், வாகனங்களும் வீடுகளும் ஆயுதங்களால் தாக்கப் பட்டு, தீ வைக்கப் பட்டன.

dmk-position சமூகத் தளங்களில் இது குறித்து உலாவரும் மறு பக்கக் கருத்து!

அந்த அப்பாவிகளின் உடைமைகளுக்கு யார் என்ன பதில் சொல்வது?! அவர்களின் கண்ணீர்க் கதைகளை கேட்டால், உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பொதுச்சொத்துக்களை சேதப் படுத்தியதற்கான நஷ்ட ஈடு வசூலிக்கப் பட்டு உரியவர்களுக்கு நிவாரணம் கொடுத்தது போல் கர்நாடக மாநில அரசும், இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை முடக்கி, அவர்களிடம் இருந்து நஷ்ட ஈடு பெற்று பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

தேவர் ஜீவனஹள்ளியை சேர்ந்த மலர்மதி என்பவர் கூறுகையில், ”எங்கள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை கொளுத்த நான்கு பேர் ஓடி வந்தார்கள். நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வெளியே போய், நாங்கள் மிகவும் ஏழைகள். இந்த வண்டியில் தான் வேலைக்கு போய் வருகிறேன். தயவுசெய்து நெருப்பு வைக்க வேண்டாம் என கை எடுத்து கும்பிட்டேன். ஆனால் அவர்கள் என்னையும் சேர்த்து தீ வைத்து விடுவதாக மிரட்டி, உள்ளே தள்ளிவிட்டனர். கஷ்டப்பட்டு காசு சேர்த்து கடந்த ஆண்டு புதிதாக வண்டியை எரித்துவிட்டார்கள்” என கண்ணீரோடு கூறினார்.

bangalore-riot2

அப்பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் என்பவர் கூறியபோது… கலவரம் நடந்த தேவர் ஜீவனஹள்ளி, காடு கொண்டனஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகளவில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய நடுத்தர மக்கள். வீட்டுக்குள் புகுந்து டிவி, பீரோ, குளிர்சாதன பெட்டி, மர சாமான்களை முஸ்லிம்கள் சேதப்படுத்தினர்.

இரும்பு கம்பி, உருட்டு கட்டை ஆகியவற்றால் தாக்கியதால் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்துள்ளனர். இதில் 20 பேர் பெண்களும், வயதானவர்களும் ஆவர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள் போதையில் இருந்தனர். வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதை தடுக்க முயற்சித்த உரிமையாளர்களை கத்தியைக் காட்டி, வெட்டி போட்டு விடுவதாக மிரட்டினர்.

ஏற்கெனவே ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டதால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்… என்றார்.

பெங்களூர் கலவரம் ஒரு மோசமான பிம்பத்தை இந்தியாவில் மீண்டும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version