
திருமலையில் பக்தர்கள் தங்கும் காட்டேஜ் அருகில் நாகப்பாம்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
ஶ்ரீவாரி தரிசனத்திற்காக பக்தர்கள் செல்லும் க்யூ லைன் நடுவில் உள்ள இடத்தில் சனிக்கிழமை நாகப்பாம்பு சீறிக்கொண்டிருந்தது. அதை கவனித்த துப்புரவு பணியாளர்கள் அச்சமடைந்து உடனே காட்டிலாகா ஊழியர்களுக்கு செய்தி தெரிவித்தார்கள்.
ஒரு மணி நேரம் போராடி அந்த பெரிய பாம்பினை ஸ்னேக் கேச்சர் பிடித்ததால் அனைவரும் அப்பாடா என்று பெருமூச்சு விட்டார்கள்.
லாக்டௌன் தாக்கத்தால் பக்தர்களின் சஞ்சாரம் அதிகளவில் இல்லாததால் யாருக்கும் எந்த ஒரு தீமையும் நிகழவில்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் கூறினார்கள்.
நல்லபடியாக பாம்பினை பிடித்து அருகில் உள்ள வனத்தில் விட்டார்கள். ஆனால் லாக்டௌன் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக ஜன சஞ்சாரம் இல்லாததால் அங்கு பாம்புகளின் சஞ்சாரம் அதிகமாக உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் கூறுகிறார்கள்.
சாதாரணமாக இந்த இடத்தில் தினமும் வாகனங்களின் போக்குவரத்தாலும் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்களாலும் மிகவும் கூட்டமாக இருக்கும்.