காதல் ஜோடிக்கு அரசாங்க மருத்துவமனையில் திருமணம்.
தான் காதலித்த இளைஞனோடு தனக்குத் திருமணம் நடக்காதோ என்ற அச்சத்தால் சில நாட்கள் முன்பு இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்தாள். அதனால் உடனடியாக அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணை ஜெகித்யால் அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
தெலங்காணாவில் ஒரு காதல் ஜோடியிடம் உண்மையான காதலை அடையாளம் கண்ட கிராம பெரியவர்கள் மகிழ்ச்சி அடைந்து அவர்கள் திருமணத்திற்கு உதவினார்கள்.
தன் காதலை பெரியவர்கள் ஏற்பார்களோ மாட்டார்களோ என்ற அச்சத்தால் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணுக்கு தைரியம் கூறி அவள் காதலனோடு திருமணம் நடத்தி வைத்தார்கள்.
இந்த ஆர்வத்தை தூண்டும் சம்பவம் ஜெகித்யால் மாவட்டத்தில் நடந்தது. ஜகித்யால் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பல்லி மண்டலம் லக்ஷ்மிபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞனும் சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று தீர்மானித்த போது பெரியவர்கள் அதனை ஏற்க மாட்டார்களோ என்று மணப்பெண் சந்தேகித்து தற்கொலைக்கு முயன்றாள். தான் காதலித்த இளைஞனோடு தனக்கு திருமணம் ஆகாது என்று பயந்தாள். சில நாட்கள் முன்பு தற்கொலைக்கு முயன்ற அவளை உடனடியாக ஜகித்யால் அரசாங்க மருத்துவமனைக்கு அருகில் இருந்தவர்கள் கொண்டு சேர்த்தார்கள். சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் தற்போது உடல் தேறி வருகிறாள். அந்த இளம் ஜோடியின் காதலில் உண்மை இருப்பதை உணர்ந்த கிராம பெரியவர்கள் அரசாங்க மருத்துவமனையிலேயே அந்த பெண் காதலித்த இளைஞனை அழைத்து திருமணம் நடத்தி வைத்தார்கள். இதனால் அந்த ஜோடி மகிழ்ச்சி அடைந்தது.