புவனேஷ்வர்: 38 நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு இந்தியா பயிற்சி அளிக்கும் என்று கூறினார் இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர். மேலும் இந்தியா பாதுகாப்பு சாதனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் அவ தெரிவித்து உள்ளார். புவனேஷ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், “சுமார் 38 நாடுகள், தங்களது ராணுவ வீரர்களை பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றனர். நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம். நாங்கள் ஏற்றுமதி மூலம் குறிப்பிட்ட அளவு பாதுகாப்பு சாதனங்களை வழங்கவும் அல்லது நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக இந்தியாவைச் சார்ந்திருக்கும் நிலையில், கடன் மூலம் வழங்கவும் பரிசீலனை செய்து வருகிறோம்.” என்று கூறினார். பாதுகாப்பு காரணமாக எந்தெந்த நாடுகள் பயிற்சிக்காக தங்களது நாட்டு ராணுவ வீரர்களை இந்தியாவிற்கு அனுப்பியது என்பதை தெரிவிக்க முடியாது என்று மனோகர் பாரிக்கர் தெரிவித்து விட்டார்.
Popular Categories