பீகாரில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் இதுதான் தமக்கு கடைசி தேர்தல் என்று தெரிவித்த போதும் அவருக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு என்பது இந்தத் தேர்தலில் கேள்விக்குறியாகியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், லாலு கட்சியின் சார்பில் போட்டியிட்ட தேஜஸ்வி, தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோருக்கு இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் – சி வோட்டர்ஸ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 243 இடங்களில் ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணி 120 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாஜக கூட்டணி 116 இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.
சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஓரிடத்தில் மட்டுமே வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 6 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிகிறது.
ஜன்கி பாத் எக்ஸிட் போல்:
பாஜக கூட்டணி: 91-117
காங்கிரஸ் கூட்டணி-118-138
லோக் ஜனசக்தி-5-8
பிறக் கட்சிகள்-3-6
இந்தியா டிவி கருத்துக் கணிப்பு:
பாஜக கூட்டணி: 112 (பாஜக: 70 | ஐக்கிய ஜனதாதளம்: 42)
காங்கிரஸ் கூட்டணி: 110 (ராஷ்ட்ரீய ஜனதாதளம்: 85 |காங்கிரஸ் 25)
ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்பு
பாஜக கூட்டணி: 104-128
காங்கிரஸ் கூட்டணி-108-131