குடியரசுத் தலைவர் இரங்கல்: சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவன் யூ மறைவிற்கு குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டூவிட்டர் வளையதளத்தில் தெரிவித்ததாவது:- சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் திரு. லீ குவன் யூ மறைவிற்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உன்னதமான ஒரு தலைவரின் இழப்பிற்கு ஆசிய நாடு வருத்தம் அடைகிறது என்று குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். பிரதமர் இரங்கல்: நவீன சிங்கப்பூரின் தந்தை திரு. லீ குவன் யூ மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தொலை நோக்கு பார்வை கொண்ட ஆட்சி நிபுணர், தலைவர்களில் சிங்கமாக திகழ்ந்த திரு. லீ குவன யூவின் வாழ்க்கை அனைவருக்கும் சிறந்த பாடமாக உள்ளது. அவர் மறைவுச் செய்தி எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில், திரு. லீ குவன் யூவின் குடும்பத்தினருடனும் சிங்கப்பூர் மக்களுடனும் இணைந்து நாங்களும் பிராத்தனை செய்கிறோம். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் மறைவு: மோடி, பிரணாப் இரங்கல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari