வேத கோஷம் முழங்க… புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்!

parliament-boomi-pooja-1
parliament-boomi-pooja-1

ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி #NewParliament4NewIndia

புதிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வேத மந்திரங்கள் முழங்க இதற்கான அடிக்கல் நாட்டப் பட்டது. தொடர்ந்து, ஜெயின், புத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மத குருமார்களும் இந்த விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

parliament-boomi-pooja2

தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் கடந்த 1927 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. பழைய கட்டடத்தில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து ரூ.971 கோடி  செலவில், புதிய  கட்டடத்தைக் கட்ட மத்திய அரசு திட்டமிட்டது. பழைய கட்டடத்துக்கு அருகிலேயே அதை ஒட்டி புதிய கட்டடம் கட்டப்படுகிறது.  இந்த கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் ‘டாடா ப்ராஜெக்ட்ஸ்’ நிறுவனத்திடம் வழங்கப் பட்டுள்ளது. வரும் 2022 ஆம் ஆண்டில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் தயாராகிவிடும் .

new-parliament-foundation

புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, ஜெயின், புத்த, கிறிஸ்தவ, முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள் விழாவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

new-parliamentary-house-all-religion-prayers

இந்த விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா, மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ், தொழிலதிபர் ரத்தன் டாடா, வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

new-parliament-building-sample

புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, புதிய இந்தியாவுக்கான புதிய நாடாளுமன்றம்  – #NewParliament4NewIndia என்ற ஹேஷ்டாக் ட்விட்டர் சமூகத்  தளத்தில், தேசிய அளவில் டிரெண்ட் ஆனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow Dhinasari on Social Media

19,101FansLike
379FollowersFollow
74FollowersFollow
0FollowersFollow
3,892FollowersFollow
17,300SubscribersSubscribe
-Advertisement-
Exit mobile version