மே 7, 2021, 4:07 காலை வெள்ளிக்கிழமை
More

  தாங்கள் விதைத்ததை அறுவடை செய்யும் ‘விவசாயி’ வேடதாரிகள்!

  நான் வணங்கும் இறைவன் துஷ்டரை அழிக்க நரசிம்மனாகத் தான் வர வேண்டும் என்று இல்லை அவன் நரேந்திர மோடியாகக் கூட வருவான்

  நீங்கள் விதைத்த விதையையும் செய்த வினையையும் ஒரு நாள் நிச்சயம் அறுவடை செய்து தான் ஆக வேண்டும் – இந்து தருமம்

  இதுவரை மத்திய அரசு பொறுமை காத்து வந்ததும், மீண்டும் மீண்டும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்ததும், பிரச்னை சுமுகமாக முடிய வேண்டும் என்ற பொறுப்புணர்ந்த அரசு என்பதால் மட்டுமே!

  ஆனால் விவசாயிகள் போர்வையில் பிரிவினைவாதிகளும் தேச துரோகிகளும் கலந்து விட்ட தாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் அறிக்கை வெளியிட்ட உடனேயே, நிச்சயம் உளவுத்துறை இவர்களின் நோக்கம் குடியரசு தின விழாவை சீர்குலைப்பதே என்று நிச்சயமாக கணித்து இருக்கும். அதை உள்துறை மற்றும் பிரதமர் அலுவலகம் வரை நிச்சயம் கொண்டு போய் சேர்த்து இருக்கும்!

  அப்படி இருந்தும் மத்திய அரசு பல முறை பேச்சு வார்த்தை நடத்தி வந்தது… மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இவர்களும் நம் தேசத்தின் குடிமக்கள் என்ற உணர்வும் அக்கறையும் இருந்ததால் மட்டுமே!

  IMG-20210126-WA0037-1
  IMG-20210126-WA0037-1

  ஆனால் இவர்களின் நோக்கம் பிரச்னையை பேசித் தீர்ப்பதோ விவசாய மசோதா எதிர்ப்போ இல்லை; இதன் பெயரில் வேறு ஏதோ உள்நோக்கம் இருப்பதாக சாதாரண மக்களால் கூட இந்த நிகழ்வுகளை வைத்து உணர முடிந்தது

  காரணம் எந்த ஓர் உண்மையான போராட்டக் களத்திலும் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கையை வைத்து போராடுபவர்கள் போராடினாலும், முடியாத பட்சத்தில் தங்களுக்கு சாதகமாக சில தளர்வுகள் கிடைத்தால் போதும் என்று நெகிழ்வுத் தன்மையோடு தான் இருக்கும். அதோடு விரைவாக தீர்வு கண்டு போராட்டத்தை முடித்து விட்டு இயல்பு வாழ்க்கை க்கு திரும்ப வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

  ஆனால் இவர்களின் கள பிண்ணணி அப்படி இல்லாமல் எப்படி போராட்டத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்தலாம்? எங்கெல்லாம் போராட்டக் களத்தை விரிவு படுத்த லாம் என்று தான் இருந்தது

  மத்திய பாஜக அரசை எதிர்த்து களமிறங்க தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட கூடாது என்ற எண்ணமும் இதை எப்படி எல்லாம் பெரிதுபடுத்தலாம் என்ற தேடலும் அதை வைத்து உள்நாட்டிலும் மத்திய அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்க வேண்டும் சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்ததை ஒவ்வொரு தேசாபிமானியும் உணர முடிந்தது

  IMG-20210126-WA0039-0
  IMG-20210126-WA0039-0

  அதோடு முதலில் ஆளும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என்று இவர்கள் ஆதரவு நிலைப்பாடு எடுத்தது இவர்களை எல்லாம் கட்டவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கும் மூன்றாம் தர அரசியல் என்பதையும் உணர முடிந்தது

  சென்ற வருடம் ஷாகின் பாக்கில் ஆரம்பித்த சிஏஏ மற்றும் என் ஆர் சி எதிர்ப்பு போராட்டம் எப்படி முடிந்தது என்று பார்த்த பிறகும்கூட நீதிமன்றமும் இவர்களை ஆதரித்ததுதான் வேதனை!

  அனைத்தையும் உன்னிப்பாக மத்திய அரசு கவனித்து, இதன் பின்னணியை எல்லாம் தோண்டி துருவி பார்த்து வந்ததன் வெளிப்பாடுதான்… கனடாவில் ஆரம்பித்து காரூண்யா வரை இதற்கு காரணமான தேசதுரோக கும்பல் யாவும் இன்று கலகலத்துப் போயிருப்பது! அப்போதே மத்திய அரசு நிச்சயம் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து இருக்கும்!

  ஒன்று இந்த விஷயத்தை சுமூகமாக பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதற்காக தான் ஆளும் அரசு என்று ஈகோ பார்க்காமல் மீண்டும் மீண்டும் இறங்கி வந்து இவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது

  அது முடியாத நிலையில் இவர்களை எல்லாம் இவர்களின் போக்கிலேயே ஆடவிட்டு இவர்களின் முகத்திரையை அவர்களாகவே விலக்கி விட்டு சுயரூபத்தை வெளிப்படுத்த வைத்து அதை உலகிற்கு வெட்ட வெளிச்சமாகக் காட்டிவிட வேண்டும் என்ற எண்ணம் ஆகக் கூட இருக்கலாம்…

  அதன் பிறகு இவர்களின் பின்னணி தெரியாமல் இவர்களை ஆதரித்தவர்கள்கூட இவர்களைக் கைவிட்டு ஒதுங்கிப் போவர். ஆனால் இவர்களின் பின்னணியில் இருந்து இயக்கியவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் வெளிப்படையாக இவர்களை ஆதரித்து வெளியே வருவார்கள்..

  உதாரணம், இன்றைய வேசித்தன ஊடகங்களின் விவாதமும் குணசேகரன், சுந்தரவள்ளிகளின் ஓலமும்!

  திமுக தலைவரின் மற்றும் அவரது மகனின் ட்விட்டர் பதிவுகளும் சாட்சியம்!

  அது இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசு தெளிவாக தீர்க்கமாக முடிவை எடுக்க சட்டப் படியும் அரசியல் ரீதியாகவும் பல வகையிலும் உதவும்.

  இதை எல்லாம் உணர்ந்துதான் மத்திய அரசு உச்சபட்ச பொறுமை காத்து வந்ததும் அரசியல் ரீதியாகக் கூட இவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் அமைதி காத்து வந்ததும்!

  ஆனால் அரசின் பொறுமையையும் பொறுப்புணர்வையும் உணர முடியாத தறுதலைகள் இன்று போராட்டம் என்ற பெயரில் தேசத்தின் இறையாண்மையையும் மதிக்கத் தவறி இழிவுபடுத்த துணிந்தது அவர்களின் அகம்பாவத்தின் உச்சம்; அழிவின் ஆரம்பம் அன்றி வேறல்ல!

  விவசாயிகள் போராட்டம் எனில் பிரிவினைவாத கோஷம் வந்த உடனே மத்திய அரசு இதை எல்லாம் யூகித்து எதிர்பார்த்து பல வழிகளில் யோசித்து இருக்கும். ஆனால் அவர்களின் பொறுமையை பலவீனமாக கணித்த மூடர்கள் இன்று அவர்களின் அக்கிரமத்தின் உச்சம் இந்திய தேச துரோகம் என்பதை வெளிப்படையாக நிரூபித்து விட்டார்கள்.

  இனி கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை இனி இந்த தேசத்தின் குடிமக்கள் பார்வையில் இவர்கள் யாவரும் அழிக்க பட வேண்டிய விஷ நாகங்கள்

  இவர்களின் கூட்டாளிகள், நாயகர்கள் தங்கள் மகிழ்ச்சியை ஆதரவாக வெளிப்படுத்தும் போது உளவுத்துறை முதல் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை வரை அனைவரின் வேலையும் சுலபமாகி விடும்.

  போராட்டம் என்ற பெயரில் தேசத்தை அவமதித்த துஷ்டர்களே இது நாள் வரை உங்களை ஆட விட்டது உங்களுக்கு பணிந்து இல்லை உங்களின் சுயரூபம் வெளிப்பட வேண்டும் என்ற காத்திருப்பு என்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்

  நீங்கள் குடியரசு நாளில் தேசியக் கொடியையும் தேசத்தையும் அவமதித்ததால் அதை வருத்தத்தோடு கண்டித்து விட்டு கடந்து போக இது ஒன்றும் இத்தாலி அடிமை மன்மோகன் சிங்கின் ஆட்சி இல்லை மூடர்களே!

  இந்தியாவில் இருந்து கொண்டே தனி தேசம் என்ற அகந்தையில் தேசியக் கொடி ஏற்ற தடை விதித்த காஷ்மீர் அரசுக்கு சவால் விட்டு காஷ்மீரில் போய் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து அதற்கு மரியாதை செய்து விட்டு இன்று இந்த இடத்தில் பறக்கும் பாரதக் கொடி ஒரு நாள் காஷ்மீர் மாநிலம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கும்; அன்று காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறி இருக்கும் என்று சவால் விட்டு அதை தன் வாழ்நாளில் வெற்றிகரமாக நடத்திக் காட்டிய நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்ற இந்திய ராஜ சிம்மத்தின் ஆட்சி என்பதை மறந்து விட வேண்டாம்!

  இந்திய தேசியக் கொடியை கைகளில் ஏந்திப் போராடிய நீங்கள் எப்போது இந்திய தேசியக் கொடியை அவமதிக்கத் துணிந்தீர்களோ அப்போதே உங்களின் அழிவு ஆரம்பமாகி விட்டது என்பதன் வெளிப்பாடே இன்று நீங்கள் ஆடிய பேயாட்டம்

  இது வரை உங்களின் ஆட்டத்தை உலகம் பார்த்தது! இன்று நீங்கள் செய்த தேசத் துரோகத்தையும் அதை உள்நாடு முதல் பாகிஸ்தான் வரை உங்களின் ஆதரவாளர்கள் வெற்றிக் களிப்போடு கொண்டாடியதையும் பார்த்து உலகம் காறித் துப்புகிறது!

  இன்றைய விடியலை பெருமிதத்தோடு வரவேற்கக் காத்திருந்த ஒவ்வொரு இந்திய தேசாபிமானியும் உதிரம் கொதித்து கொண்டு இருக்கிறோம் உங்களின் அழிவைக் காண! உங்களின் உச்சத்தை நீங்கள் ஆடித் தீர்த்து விட்டீர்கள்! இனி அதற்கான விளைவை எதிர் கொள்ள தயாராக இருங்கள் நீங்களும் உங்களின் கூட்டாளிகளும்!

  நீங்கள் அவமதித்தது தேசியக் கொடியையும் தேசத்தையும் மட்டும் இல்லை; அந்த தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர போராட்ட களத்தில் உயிரை இழந்த இந்திய தேசிய மண்ணின் மைந்தர்களின் தேசபக்தியையும் தான்!! அதற்காக உங்களுக்கு இந்த உலகில் எங்கும் மன்னிப்பு கிடைக்காது!

  எந்த தேசியக் கொடியை காஷ்மீரில் பனிமலையில் ஏற்றி வைக்கும் முயற்சியில் ஆயிரமாயிரம் இராணுவ வீரர்கள் உயிரை மாய்த்துக் கொண்டார்களோ,
  முப்படைகளின் வீரர்கள் யாவரும் எந்தக் கொடியை பறக்க விட்டு தங்களின் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்களோ…
  அந்தக் கொடியை அவமதித்து அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்திய உங்களை உங்களின் தாயாக இருந்தாலும்கூட இந்த மண்ணில் பிறந்த எந்தப் பெண்ணும் மன்னிக்க மாட்டாள்.

  உங்களுக்கு உயிர்ப் பிச்சை கேட்டு தன் பெண்மையை தாய்மையை தானே அவமதித்துக் கொள்ள மாட்டாள். உங்களின் இறுதிக் கட்டம் நெருங்கி விட்டது தேச துரோகிகளே!

  தேசியக் கொடியை கைகளில் ஏந்தி பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடி உயிர் போகும் தருணத்திலும்கூட தன் கைகளில் இருந்த கொடியை காத்தபடி உயிரை விட்ட கொடி காத்த குமரனின் மண்ணில் இருந்து உங்களை சபிக்கிறேன்…

  துஷ்டனே நீ செங்கோட்டையின் கொடிக் கம்பத்தில் ஏறி என் தேசியக் கொடியை அப்புறப்படுத்தி அவமதித்த போது என் மேலாடையை பற்றி இழுப்பதை போல உணர்ந்தேனடா மிருகமே உன் தலையறுத்து உதிரம் குடித்தால் கூட எனக்கு மூழுமையான மன அமைதி கிடைக்காதடா இழிபிறவிகளே!

  இன்றைய விடியலை பெருமிதத்தோடு வரவேற்ற நான் இன்று உங்களின் தேச துரோகத்தால் மனமுடைந்த கண்ணீரோடு உணவவின்றி உறங்கப் போகிறேன்!

  என் கண்ணீரையும் காயத்தையும் என் அவமானக் கொதிப்பையும் நான் நித்தமும் வணங்கும் நரசிம்ம சுவாமியின் பாதங்களில் போட்டு விட்டு உறங்கப் போகிறேன்!

  உங்களின் அழிவு இன்று காலை முதல் ஆரம்பமாகி விட்டது இனி உங்களில் ஒருவனும் தப்ப முடியாது எங்கும் ஒடி ஒளியவும் முடியாது! உங்களின் சவக் குளியலைக் காண வேண்டும் என்று காத்திருக்கிறேன் உக்ர நரசிம்மனின் பாதங்களை இறுக பற்றிக் கொண்டு!

  என் கண்ணீரும் என் போல எண்ணற்ற தேசாபிமானிகளின் கண்ணீரும் சாபமாக மாறி உங்களையும் உங்களுக்கு துணையாக இருக்கும் ஒட்டு மொத்த தேசத் துரோகிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

  என் இறைவன் இதுவரையிலும் என்னை என் வேண்டுதலை கைவிட்டதும் இல்லை . நான் வணங்கும் இறைவன் துஷ்டரை அழிக்க நரசிம்மனாகத் தான் வர வேண்டும் என்று இல்லை அவன் நரேந்திர மோடியாகக் கூட வருவான் என்று அறிவேன்!

  உங்களின் அழிவைக் காண ஒவ்வொரு கணமும் காத்திருக்கும் ஒரு சாதாரண இந்திய குடிமகள்…

  • ஜான்சிராணி இந்துஸ்தானி !

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,234FansLike
  0FollowersFollow
  19FollowersFollow
  74FollowersFollow
  1,156FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »