Home இந்தியா 14 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு! பார்கின்சன் நோய்க்கு JTremor-3D கருவி!

14 வயது சிறுமியின் கண்டுபிடிப்பு! பார்கின்சன் நோய்க்கு JTremor-3D கருவி!

Joey-Kesker-1
Joey-Kesker-1

பார்கின்சன் என்கிற நரம்பியல் (நடுக்குவாதம்) நோயால் பாதிக்கப்பட்ட தனது மாமாவின் ஊக்குவிப்பால் மனித உடலில் ஏற்படும் நடுக்கத்தினை துல்லியமாகக் கணிக்க உதவும் JTremor-3D எனும் கருவியை மேலும் துல்லியமாக மேம்படுத்தியுள்ளார் பூனேவைச் சேர்ந்த 14 வயது சிறுமியான ஜூய் கேஸ்கர்.

கேஸ்கரின் இந்த கண்டுபிடிப்பானது மத்திய அரசின் IRIS எனப்படும் ஸ்டெம் செல் கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் 2020-2021-ம் ஆண்டிற்கான விருதினை பெற்றுள்ளது.

கேஸ்கரின் இந்த புதிய மேம்படுத்துதல் மூலம், நோயாளியின் உடலில் ஏற்படும் நடுக்கங்களை துல்லியமாகக் கணித்து அதனை (Cloud database) கிளவுட் தரவுத்தளம் மூலம் மருத்துவருக்கு அனுப்ப முடியும். இதன் மூலம் சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ள உதவுகின்றது.

இது குறித்து கேஸ்கர் கூறுகையில், “நான் எனது மாமாவை 9 ஆண்டுகளாக கவனித்து வருகின்றேன். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளையும் அதன் மூலம் ஏற்படும் மாற்றங்களையும் நான் கண்காணித்து வந்துள்ளேன். ஆனால், அவரது உடலில் ஏற்படும் நடுக்கங்களை துல்லியமாக அளவிட கருவிகள் ஏதும் இல்லாதது பெரும் பின்னடைவாக இருந்தது. அதனைத் தொடர்ந்து நான் இந்த கருவியை மேம்படுத்தியுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version