ஆந்திராவில் விவசாயிகளின் 24 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக பிரகாசம் மாவட்டத்தில் சந்திரபாபு நாயுடு உரை நிகழ்த்தினார்.
ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.என். சந்திரபாபுநாயுடு பிரகாசம் மாவட்டம் தார்சி கிராமத்தில் ஜென்ம பூமி மா ஊரு நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்
அப்போது பேசிய அவர் ஆந்திர மாநிலம் நிதி பற்றாக்குறையில் தத்தளித்து கொண்டிருக்கும் இந்த நிலையிலும் விவசாயிகளின் 24 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஏழை எளிய மக்கள் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று சந்திரஅண்ண சங்கராந்தி காணிக்கை அளித்து வருவதாகவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்ததை தமது கட்சிஆட்சிக்கு வந்ததும் அனைவருக்கும் கேஸ் இணைப்பு தரப்பட்டுள்ளது.
அத்துடன் அனைவருக்கும் ரேஷன் கார்டு என்டிஆர் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் அளித்தல் டோக்ரா சங்கத்தின் மூலமாக வரும் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு முதல் திருமண காணிக்கை அளிக்க முடிவு செய்துள்ளோம் வருங்காலத்தில் 1 லட்சம் ஏழைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் திட்டம் உள்ளது.
இதே போல் 57 லட்சம் மாணவர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் பள்ளி படிப்பிற்கான கட்டணம் செலுத்துவது எங்கள் அரசின் சிறப்புகள். மேற்படிப்பிற்கு அயல்நாட்டில் செல்ல விரும்பும் மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் உதவித்தொகை அளித்து வருகிறோம். இங்கு பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் 100 சதவிகித கழிப்பறை கட்டி உள்ளோம்
பி சி வகுப்பினர் எங்கள் கட்சிக்கு ஆதரவாகவே உள்ளனர் அவர்களுக்கு நாங்கள் பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று பேசினார்.