Home அடடே... அப்படியா? செல்போன் பார்த்து நடந்து போனா… இப்படித்தான் உயிரும் பறந்து போவும்..! வைரல் வீடியோ!

செல்போன் பார்த்து நடந்து போனா… இப்படித்தான் உயிரும் பறந்து போவும்..! வைரல் வீடியோ!

accident-while-crossing-road
accident while crossing road

கண் மூடி திறக்கும் நேரத்திற்குள் விபத்து. பறந்து போய் ஆளுக்கு ஒரு பக்கமாக விழுந்த இருவர். சிசிடிவி வீடியோ வைரல்.

ஒருவர் கையில் வைத்து எதையோ (மொபைல்?) பார்த்துக் கொண்டே சாலையை கடக்கிறார். அலட்சியமாக இருந்தால் எப்படிப்பட்ட தீராத நஷ்டம் விளையும் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோவை சைபராபாத் டிராபிக் போலீசார் ஞாயிறு பிப்ரவரி 21 ட்வீட் செய்துள்ளார்கள்.

ஒருவர் அலட்சியமாக மொபைல் பார்த்துக்கொண்டே ரோடு கிராஸ் செய்கிறார். மற்றொருவர் மிக வேகமாக வண்டி ஓட்டுகிறார். அதுகூட ஹெல்மெட் இல்லாமல். இருவருடைய உயிருக்குமே ஆபத்து. ஒரே கணத்தில் கண் மூடி திறப்பதற்குள் நடந்த இந்த சம்பவம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாலையை கடக்கும்போது அலட்சியமாக இருந்தால் எப்படிப்பட்ட விபத்து நேரும் என்பதை இந்த வீடியோ தெரிவிக்கிறது.

ஹைதராபாத்தில் உள்ள சிந்தல் – ஜீடிமெட்லா பகுதியின் முக்கிய சாலையில் ஒருவர் கையில் எதையோ சரிசெய்துகொண்டு சாலையைக் கடக்கிறார். ஒருவேளை மொபைலை பார்த்துக் கொண்டிருக்கிறார் போலும். அவருடைய மனம் முழுவதும் கையிலிருந்த பொருள் மீதே உள்ளது. அதற்குள் வேகமாக ஏதோ வருவதை கவனித்து அதிலிருந்து தப்பிப்பதற்காக ஓட்டமாக ஓடி டிவைடரைத் தாண்ட முயற்சிக்கிறார்.

அவ்வளவுதான். அதே இடத்திற்கு வேகமாக வந்த ஒரு பைக் அவர் மீது மோதியது. பைக்கோடு கூட இருவருமே ஆளுக்கு ஒரு பக்கம் போய் விழுந்தார்கள். பைக்கை ஓட்டி வந்தவருக்கு ஹெல்மெட் இல்லை.

துரதிர்ஷ்டவசமாக அவர் ஒரு காரின் கீழே விழுந்தார். கார் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினாலும் கீழே விழுந்தவர் அசையாமல் கிடைக்கிறார். ஹெல்மெட்டின் அவசியத்தை இந்த சம்பவம் மேலும் ஒரு முறை நிரூபிக்கிறது.

நெட்டிசன்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோவை சைபராபாத் டிராபிக் போலீசார் ட்வீட் செய்துள்ளனர்.
இது வைரலாக மாறியுள்ளது.

இது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார்கள். அவர்கள் உயிருடன் உள்ளார்களா அல்லது இறந்து விட்டார்களா என்று ஒரு நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார். சாலை நடுவில் டிவைடருக்கு பதிலாக உயரமான இரும்பு தடுப்புகளை ஏற்பாடு செய்தால் இதுபோன்ற விபத்துக்கள் நேராது என்று மற்றொருவர் விமர்சித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version