ஏப்ரல் 12, 2021, 6:57 மணி திங்கட்கிழமை
More

  ரூ.24 லட்சம்.. ஆட்டோ ஓட்டுநருக்கு உதவிய மக்கள்!

  desh raj - 1

  மகாராஷ்டிரா தலைநகர் மும்பையைச் சேர்ந்தவர் தேஸ்ராஜ் (72). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரு மகன்கள் இருந்தனர். இளம் வயதிலேயே மனைவியை இழந்த இவர், தன்னந்தனியாக யாருடைய உதவியும் இன்றி தனது மகன்களை வளர்த்து பெரியவர்களாக்கினார். பின்னர், தனது சொந்த செலவிலேயே அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்தார்.

  இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விபத்தில் தேஸ்ராஜின் இரு மகன்களும் உயிரிழந்தனர். அன்றில் இருந்து அவரது வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.

  இரண்டு மருமகள்களையும், 4 பேத்திகளையும் காப்பாற்றும் பெரும் பொறுப்பு அவரது தலையில் விழுந்தது.

  நாளொன்றுக்கு சராசரியாக 8 மணிநேரம் ஆட்டோ ஓட்டி வந்த அவர், பேத்திகளின் கல்விக் கட்டணத்துக்காக 16 மணிநேரம் ஆட்டோ ஓட்டினார்.

  இந்நிலையில், அவரது மூத்த பேத்தி சமீபத்தில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து மேற்படிப்பை தொடர தில்லிக்கு செல்ல விரும்புவதாக தனது தாத்தா தேஸ்ராஜிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு பல லட்சங்கள் தேவைப்படும். இருந்தபோதிலும், தனது பேத்தியின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய அவர், தனது ஒரே சொத்தாக இருந்த வீட்டையே விற்க துணிந்தார். அதில் வந்த பணத்தைக் கொண்டு பேத்தியின் கல்லூரிக் கட்டணத்தை கட்டிய அவர், குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள சிறிய வாடகை வீட்டில் குடியேறினார்.

  முதியவர் தேஸ்ராஜின் இந்த தன்னலமற்ற வாழ்க்கை கதையை அறிந்த ‘ஹியூமன்ஸ் ஆப் மும்பை’ என்ற தன்னார்வ இயக்கம், அவர் குறித்து சமூக வலைதளத்தில் கடந்த 11-ம் தேதி பதிவிட்டது. தேஸ்ராஜின் கதையை படித்த அனைவரும், அவருக்கு உதவ முன் வந்தனர். அவ்வாறு சில வாரங்களிலேயே ரூ.24 லட்சம் பணம் சேர்ந்தது.

  இதனைத் தொடர்ந்து, அந்தப் பணத்தை ‘ஹியூமன்ஸ் ஆப் மும்பை’ இயக்கம் அண்மையில் தேஸ்ராஜிடம் வழங்கியது. கண்ணீர் மல்க அந்தப் பணத்தை பெற்றுக் கொண்ட அவர், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  20 − six =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »