Home இந்தியா இளநீர் சீவுவது போல தாயயையும் மகளையும் கொன்ற வியாபாரி!

இளநீர் சீவுவது போல தாயயையும் மகளையும் கொன்ற வியாபாரி!

கவரிங் நகைக்காக தாய், மகள் இளநீர் வெட்டும் அரிவாளால் வெட்டி கொலை செய்த வியாபாரி சிக்கினார்.

புதுச்சேரி நோனாங்குப்பம் பகுதிளில் சிதம்பரம்- விஜயலட்சுமி (48) தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் மகள்கள் ஜோதி, மாதங்கி என்ற சந்தியா(24), மகன் வாழுமுனி ஆகியோருடன் வசித்து வந்தனர். இதில் சிதம்பரம் ஏற்கனவே இறந்துவிட்டார். இதனையடுத்து விஜயலட்சுமி தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒன்றாம் தேதி விஜயலட்சுமி தனது மகள் சந்தியாவுடன் கடலூர் அடுத்த எடையார்பாளையம் கிராமத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன்பின்னர் அவர்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இருவரும் தென்னந்தோப்பில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் கூறிய தகவல் அடிப்படையில் போலீசார் விரைந்துசென்று, இரட்டை கொலை சம்பவம் குறித்த விசாரணை நடத்தினர். தாய், மகளை கொடூரமாக வெட்டி கொலை செய்தது யார் எவலைவீசி தேடி வந்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தனிப்படை போலீசார் சொத்து பிரச்னை காரணமாக உறவினர்களே கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன்படி கொலை செய்யப்பட்ட விஜயலட்சுமியின் உறவினர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சம்பவத்தன்று ஒருவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்ததாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கூறினர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில், புதுச்சேரி நயினார்மண்டபத்தை சேர்ந்த இளநீர் வியாபாரியான இருசப்பன்(48) என்பவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தாய், மகளை கொலை செய்ததை இருசப்பன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்துஅவரிடம் நடத்திய விசாரணையில், இருசப்பன் கடந்த 2004ஆம் ஆண்டு அரியாங்குப்பத்தை சேர்ந்த தனியார் பஸ் மேலாளரின் மனைவியை கொலை செய்து நகையை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டு ஜாமீனில் வந்தது தெரியவந்தது.

அதன்பிறகு இருசப்பன் நோனாங்குப்பத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் தங்கி, நயினார்மண்டபம் பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்ததும், தென்னந்தோப்புக்கு தனியாக வரும் விஜயலட்சுமி, அவரது மகள் சந்தியா ஆகியோரை நோட்டமிட்டு, அவர்களை அரிவாளால் கொடூரமாக வெட்டி கொலை செய்ததோடு, விஜயலட்சுமியின் காதில் இருந்த கம்மலை எடுக்க முடியாததால், காதை வெட்டி கம்மலை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து இருசப்பனை கைது செய்து, அவரிடம் இருந்து மீட்ட நகைகளை போலீசார் சோதனையிட்டபோது, அவை கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. ‘கவரிங் நகைகளை தங்க நகை என நினைத்து தாய், மகளை இளநீர் வியாபாரி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version