ஏப்ரல் 18, 2021, 11:15 காலை ஞாயிற்றுக்கிழமை
More

  சாகித்திய அகடமி விருதுகள்: தெலுங்கில் பெற்றார் நிகிலேஷ்வர்!

  ஜெகன் மோகன் ரெட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற நிகிலேஷ்வரையும் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் 2020 விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட

  telugu sahidya academy winner - 1

  மத்திய சாகித்திய அகடமி 2020 அவார்டுகள் பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது.

  நிகிலேஷ்வர் -அக்னி ஸ்வாச- தெலுகு,  வீரப்பமொய்லி -ஸ்ரீ பாகுபலி,அஹம்சத்விக்விஜயம் -கன்னடம்,  அருந்ததி சுப்பிரமணியம் – When god is traveller (இங்கிலீஷ்), ஹரிஷ் மீனாக்ஷி -குஜராத்தி,  அனாமிகா -ஹிந்தி, ஆர் எஸ் பாஸ்கர் – கொங்கிணி, இருகபம் தேவன்- மணிப்புரி,  ரூப் சந்தத் ஹன்சா- சந்தாலி,  நந்த கரே- மராட்டி,  மகேஷ் சந்திர சர்மா- சம்ஸ்கிருதம், இமயம் – தமிழ், உசேன் உல் ஹக், அபூர்ப குமார் சைகியா – அஸ்ஸாமி, தரணீதர் ஓவாரி – போடோ, ஹ்ருதய கௌல் பாரதி – காஷ்மீரி, கமா காந்த் ஜா – மைதிலி, குருதேவ் சிங் ரூபானா – பஞ்சாபி, ஞான் சிங்- டோங்கிரி, ஜீதோ லால்வானீ – சிந்தி, மணிசங்கர் முகோபாத்யாயா – பெங்காலி.. ஆகியோர் மத்திய சாகித்திய அகாடமி விருது பெறுகிறார்கள். 
  அரசியல் தலைவர், எழுத்தாளரான வீரப்பமொய்லிக்கு  மத்திய சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. 
  விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 20 மொழிகளில் கவிதைகள் , நான்கு நாவல்கள், 5 சிறுகதை நூல்கள், இரண்டு நாடகங்கள்  உள்ளன. 

  தெலுங்கு எழுத்தாளர் நிகிலேஷ்வருக்கு (82) விருது கிடைத்துள்ளது.  தெலுங்கில் நிகிலேஷ்வர் எழுதிய அக்னி ஸ்வாச என்ற கவிதை நூலுக்கு விருது கிடைத்துள்ளது. நிகிலேஷ்வர் என்பது இவருடைய புனைபெயர்.

  இவருடைய  இயற்பெயர் கும்பம் யாதவரெட்டி. இவர் எழுதிய அக்னி ஸ்வாச  என்ற  கவிதை நூலுக்கு அவாாார்டு கிடைத்துள்ளது.  இவர் திகம்பர கவிஞர்களில் ஒருவராக பெயர் பெற்றவர். இவர்  கவிதைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள், விமர்சன நூல்கள் பல எழுதி உள்ளார்.

  நிகிலேஷ்வர்  1938 ஆகஸ்ட் 11 ல்  தெலங்காணாவில் யாதாத்ரிபுவனகிரி மாவட்டம் வீரபல்லியில் பிறந்தார். ஆர்மி ஏர்போர்சில் பணிபுரிந்தவர்.

  கோல்கொண்டா பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார். உஸ்மானியா யுனிவர்சிட்டியில் படித்தார். திகம்பர கவிதைகள் எழுதுவதில் பெயர் பெற்றவர். இவர் படைப்புகளுக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன.

  எக்ஸ்ரே அவார்டு 1984, யேட்டுகூரி ராமமூர்த்தி சாாகித்ய அவார்டு 2003, சோனசுந்தர் விருது 2008, தெலுங்கு விஷ்வ வித்யாலயம் பிரதீபா பரஸ்பரம் 2011, ஶ்ரீீீீஶ்ரீ சென்டினரி  சாகித்திய அவார்டு 2010, ஃப்ரீ வெர்ஸ் ஃப்ரண்ட் விருது 2011 போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

  ஆந்திர முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி சாகித்ய அகாடமி விருது பெற்ற நிகிலேஷ்வரையும் மற்றும் பால சாகித்ய புரஸ்கார் 2020 விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கொன்னகன்டி அனசூயாவையும்  பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். கொன்னகன்டி அனசூயா  ஸ்நேகிதுலு என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதி வெளியிட்டுள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,229FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,110FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »