ஏப்ரல் 22, 2021, 7:38 காலை வியாழக்கிழமை
More

  சுதந்திர தின வைர விழா… வார்தா காந்தி ஆசிரமத்தில்!

  இன்றைய புது தலைமுறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று ராமதாஸ் தடஸ் கூறினார்.

  IMG 20210313 WA0024 - 1

  காந்தியின் கொள்கைகள் உலகத்திற்கு வழிகாட்டுகிறது

  சுதந்திரத்தின் வைரவிழா இன்று வர்தா மாவட்டத்தில் காந்தி ஆஸிரமில் இன்று கொண்டாடப்பட்டது.

  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.

  மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பாபு குடி என்னும் சேவாகிராம் ஆசிரமம் ஒரு சுற்றுலாத் தலமாக மட்டுமில்லாமல் காந்தியடிகளின் கொள்கைகளை பரப்பும் மையமாக நிர்மாணம் செய்யும் முயற்சியாக சேவாகிராமின் வளர்ச்சிக்காக மாநில அரசு பட்ஜெட்டில் விசேஷ நிதியை ஒதுக்கியுள்ளது.

  IMG 20210313 WA0023 - 2

  சேவா கிராமின் வளர்ச்சிக்காக அரசு நிதியை ஒதுக்கும் போது அதில் தொய்வு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுனில் கேதார், மஹாராஷ்டிரா மாநில கால்நடைத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் கூறினார். அவர் இன்று பாபு குடியில் நடந்த சுதந்திரத்தின் வைரவிழா கொண்டாட்டத்தையொட்டி நடைபெற்ற விழாவில் இவ்வாறு பேசினார்.

  மார்ச் 12ஆம் தேதி மகாத்மா காந்தியடிகள் அகமதாபாத்திலிருந்து தண்டி யாத்திரையை துவங்கிய நாளை நினைவு கூறும் விதமாக இன்று சுதந்திரத்தின் வைரவிழா கொண்டாட்டங்கள் மஹாராஷ்டிரா மாநிலத்தின் வர்தா மாவட்டத்தில் பாபு குடியில் நடைபெற்றது.

  IMG 20210313 WA0025 - 3

  ராம்தாஸ் தடஸ், மக்களவை உறுப்பினர்,ராம்தாஸ் அம்பட்கர், எம்எல்சி, ப்ரேரணா தேஷ்ப்ரதார், மாவட்ட கலெக்டர், அசோக் குமார் சரண், சர்வ சேவா சங்கத்தை சேர்ந்தவர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

  கேதார் மேலும் கூறுகையில்,”இன்றைய தினம் மக்களுக்கு ஊக்கம் தரும் தினமாக உள்ளது. இன்றைய தினம்தான் மகாத்மா காந்தியடிகள் சபர்மதியிலிருந்து தண்டி யாத்திரையை தொடங்கி உப்பு சத்தியாகிரகத்தை ஆரம்பித்து வைத்தார். அவருடைய சத்தியத்தினாலும் அகிம்சை வழியினாலும் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. காந்திஜியின் கொள்கைகள் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்திற்கும் வழி காட்டுவதாய் அமைய வேண்டும் என்ற கொள்கையுடன் மாநில அரசு செயல்படுகிறது. சேவாகிராமம் என்ற தவ பூமியானது உலகுக்கே வழிகாட்டுவதாய் அமைந்துள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

  IMG 20210313 WA0022 - 4

  “காந்தியடிகளின் தண்டி யாத்திரையின் தொடக்கத்தில் 78 பேர் மட்டுமே பங்குகொண்டனர். பின்னர் தண்டி யாத்திரையில் 60,000 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். காந்திஜியின் கொள்கையின் அடிப்படையில் தான் நாடு செல்கிறது. அவருடைய தத்துவங்கள் இன்றைய புது தலைமுறைக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது என்று ராமதாஸ் தடஸ் கூறினார்.

  விழாவில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். அமைச்சரும் மற்ற விருந்தினர்களும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தி சர்வசமய பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். சந்தியா தலவி, நாயப் தாசில்தார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரமத்தில் உள்ளோரும் கலந்து கொண்டனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »