ஏப்ரல் 10, 2021, 5:34 மணி சனிக்கிழமை
More

  சன்யாசம் எடுத்துக் கொண்ட முன்னாள் எம்எல்ஏ.,!

  கோதாவரி புஷ்கர குளியல் துறையில் சத்குரு ஶ்ரீதத்வ விதானந்த சரஸ்வதியிடம் தீட்சை எடுத்துக் கொண்ட சிவராம கிருஷ்ணாராவு.

  sanyasa deeksha - 1

  கோதாவரி புஷ்கர குளியல் துறையில் சத்குரு ஶ்ரீதத்வ விதானந்த சரஸ்வதியிடம் தீட்சை எடுத்துக் கொண்ட சிவராம கிருஷ்ணாராவு.

  அரசியல் துறவு என்பது அரசியலில் தலைவர்கள் இடையே அடிக்கடி கேள்விப்படும் ஒரு சொல். ஐம்பது ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து இருந்த தலைவர் ஒரேடியாக சந்நியாசம் எடுத்துக் கொள்வது என்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசும் பொருளாக மாறியது.

  பத்வேலு தொகுதியை சேர்ந்த டாக்டர் சிவராம கிருஷ்ணாராவு (83) ராஜமுந்திரி கோதாவரி புஷ்கர குளியல் துறை அருகில் சாஸ்திர விதிப்படி குருமார்களின் ஆசீர்வாதத்தோடு சன்யாசம் ஸ்வீகரித்தார். இனி மேற்கொண்டு அவர் சுவாமி சிவராமானந்த சரஸ்வதி என்று அழைக்கப்படுவார்.

  sanyasa deeksha by mla - 2

  டாக்டர் சிவராம கிருஷ்ணாராவு மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டியுடன் மிகவும் நெருங்கியவராக இருந்தார்.

  1972 ல் முதல் முறையாக அசெம்பிளி தேர்தலில் போட்டி செய்து தோல்வியுற்றார். 1977ல் பத்வேலுவிலிருந்து ஜனதா பார்ட்டி வேட்பாளராக போட்டி செய்து முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதன் பிறகு 1983, 1985 தேர்தல்களில் தோல்வியடைந்தார். 1989ல் காங்கிரஸ் கட்சியில் நின்று போட்டி செய்து வெற்றி பெற்றார். அதன்பிறகு 1994, 1999, 2001 தேர்தல்களில் நின்று தோற்றார்.

  சிவராமகிருஷ்ணா ராவோடு கூட அப்போது புலிவெந்தல தொகுதியிலிருந்து மறைந்த முதல்வர் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி, மைதுகூரிலிருந்து டிஎல் ரவிந்தரா ரெட்டி மூவரும் 1972 இல் முதல் முறையாக வெற்றி பெற்றார்கள். மூவருமே டாக்டராக இருந்ததால் இளைஞர்களிடையே அப்போது மாநில அரசியலில் முக்கிய அடையாளம் காண பெற்றார்கள்.

  அன்றைய முதல்வர் அஞ்ஜையா அமைச்சரவையில் அமைச்சர் பதவிக்கு வாய்ப்பு கிடைத்தாலும் தன்னுடைய நண்பரான ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டிக்காக தன் பதவியைத் தியாகம் செய்து அவருக்கு மிகவும் நெருக்கமானவராக அடையாளம் காணப்பட்டார்.

  sanyasa deeksha by mla1 - 3

  இதற்கு முன்பாக சிவராமகிருஷ்ணா ராவின் தந்தையார் 1952ல் ஜெனரல் எலெக்ஷனில் பத்வேலுவிலிருந்து போட்டி செய்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  முக்கியமாக அடையாளம் காணப்பட்டவரான சிவராமகிருஷ்ணா ராவு 50 ஆண்டுகளாக அரசியலில் மிகவும் சுறுசுறுப்பாக பங்கு கொண்டார். 2004ல் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது மாநில அரசியலில் முக்கிய பங்கு வகித்தார். 2009ல் பத்வேலு தொகுதி எஸ்ஸி பிரிவினருக்காக ஒதுக்கப்பட்டதால் இவர் நேரடி அரசியலில் இருந்து விலக வேண்டி வந்தது.

  இரண்டாம் முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி இவருக்கு அரசியலில் முக்கியத்துவம் அளிப்பார் என்று கூறிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

  கிரண்குமார் ரெட்டி அரசாங்கத்தில் ஏபி மாநில சிடி மெடிக்கல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்மென்ட் கார்பொரேஷன் சேர்மனாராக பணிபுரிந்தார்.

  இரு தெலுங்கு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு அரசியலில் இருந்து விலகி இருந்தார். 2019 தேர்தலுக்கு முன்பாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஜகன் பார்ட்டியில் சேர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கு கொண்டார்.

  2015ல் இருந்து ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மானசரோவர் சார்தாம் அமர்நாத் மற்றும் சக்திபீடங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். ரிஷிகேஷைச் சேர்ந்த ஸ்ரீ சத்குரு தத்வ விதானந்த சரஸ்வதியின் சீடர்களில் ஒருவராக ஆனார். மூன்று மாதங்களாக முழுக்க முழுக்க ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து வந்த இவர் ஒரேயடியாக சன்னியாச தீட்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார்.

  அதன்படி வியாழக்கிழமை ராஜமுந்திரி புஷ்கர காட் குளியல் துறையில் சத்குரு ஸ்ரீ தத்வ விதானந்த சரஸ்வதி தலைமையில் சன்னியாச தீட்சை எடுத்துக் கொண்டார்.

  மக்களின் அபிமானம், ஆசிகளோடு தான் இந்த நிலைமைக்கு வந்ததாக ஸ்ரீ சிவராமானந்த சரஸ்வதி தெரிவித்தார்.

  அனைவரிலும் இறைவன் இருக்கிறார் என்றும் கடவுளின் ஆசிகளால் தான் தீக்ஷை எடுத்துக் கொண்டதாகவும் எப்போதும் கடவுள் நினைவிலேயே இருக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்றும் கூறினார்.

  மொத்தத்தில் ஒரு சீனியர் அரசியல் தலைவர், முன்னாள் எம்எல்ஏ அரசியலை விட்டுவிட்டு சன்னியாசம் எடுத்துக்கொண்டது சர்ச்சைக்குள்ளாகி பரபரப்பாக பேசப்படுகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  four × five =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,104FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »