மும்பை: உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணி தோற்றது மகிழ்ச்சி, அனுஷ்காவின் நடிப்பு அபாரம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்…. நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன். நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது. இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன். – என்று கூறியுள்ளார். மேலும், நான் தனிப்பட்ட வகையில் அனுஷ்கா சர்மாவின் நடிப்பை மிகவும் விரும்புகிறேன். அது அவர் விரும்பும் நண்பரின் செயல்திறனைக் காட்டிலும் அதிக ரசனையுடன் இருந்தது என்று கூறியுள்ளார். நான் மற்ற நாடுகளையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்… இந்திய அணியைத் தோற்கடியுங்கள். இந்தியர்கள் கிரிக்கெட் விளையாடுவது நிறுத்தப் படும்வரை, அவர்கள் அதைப் பார்ப்பது நிறுத்தப்படும் வரை … என்று கூறியுள்ளார். இந்த டிவிட்டில், கிரிக்கெட், ஆல்கஹால், சிகரெட்டை விட அதிக போதையாக்கும் தேசிய நோய் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது ட்வீட்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ட்விட்டரில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
I am sooooo happyyy India lost because I hate cricket..nd if there’s anything I hate more than cricket then it’s people who love cricket — Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2015
I hate cricket because I love my country and cricket makes my country men most non productive because they stop working and start watching — Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2015
I wish and pray to all Gods of my country to cure my country men of this dangerous disease called cricketitis — Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2015
I request the other countries teams to defeat Indian team again and again till it stops playing and Indians stop watching and start working — Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2015
Addiction of Alcohol and cigarettes only does limited and mostly personal harm but addiction to cricket is a national disease — Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2015
I personally like Anushka Sharma’s performance much much More than the performance of whoever and whatever her boyfriend is? — Ram Gopal Varma (@RGVzoomin) March 26, 2015