Home இந்தியா இடமில்லை.. நடைப்பாதையில் சடலங்கள் எரிப்பு!

இடமில்லை.. நடைப்பாதையில் சடலங்கள் எரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் நேற்று ஒரேநேரத்தில் 60க்கும் மேற்பட்ட சடலங்களை தகனம் செய்யும் சூழல் ஏற்பட்டதால், சடலங்களை சாலையில் வைத்து தகனம் செய்யும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

போதிய அளவில் தகனமேடைகள் இல்லாததால் திறந்த வெளியில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த மனித சமூகத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. 180க்கும் அதிகமான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் இந்த வைரசால் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவலநிலை தொடர்கிறது. கடந்த சில மாதங்களாக வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளது.

பல்வேறு நாடுகளில் இந்த வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவிலும் சில மாநிலங்களில் ஊரடங்கு மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சியில் ஒரே நேரத்தில் 60 சடலங்களை அடக்கம் செய்ய வேண்டிய சூழல் நேற்று ஏற்பட்டது. அதேபோல், அங்கு போதிய இடவசதி மற்றும் தகன மேடைகள் இல்லாததால் தானம் செய்ய உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

குறிப்பாக 60 உடல்களில் 35 சடலங்கள் எரிக்கப்பட்டன. 13 சடலங்கள் காந்த போலி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டன. 12 சடலங்கள் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.

அதில் அதிகமான சடலங்கள் தகன மேடையில் எரியூட்டுவதற்கு கொண்டு வரப்பட்டிருந்தன ஆனால் அங்கு உடல்களை தகனம் செய்ய போதிய இட வசதியோ அல்லது தகனமேடையோ இல்லாத காரணத்தினால் உடல்களை தகனம் செய்ய உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் ஒரு கட்டத்தில் உறவினர்கள் திறந்த வெளியிலேயே எரி மேடைகளை உருவாக்கி சடலங்களை தகனம் செய்தனர்.

அதேபோல் வாகன நிறுத்தம் இடங்களிலும் சடலங்கள் எரியூட்டப்பட்டன. குறிப்பாக மின்சார தகன மேடை பழுதடைந்தே இது போன்ற மோசமான சுழலுக்கு காரணம் என மக்கள் புகார் கூறினர். இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மார்ச் மாதத்தில், 5 தகன மற்றும் 2 கல்லறைகளில் 347 இறந்த உடல்கள் தகனம் செய்யப்பட்டன, அதேபோல் ஏப்ரல் மாதத்தில் 10 நாட்களில் 289 இறந்த உடல்கள் தகனம் செய்ய வந்தன என்பது குறிப்பிடதக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version