
வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி போன்றது. இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவே அதற்கு உதாரணம். மரணம் எப்போது எவ்வாறு நிகழும் என்று யாருமே சொல்ல முடியாது.
எந்த கணத்தில் வேண்டுமென்றாலும் அந்த நீர்க்குமிழி உடைந்து விடும் என்று வேதாந்தம் பேசுவதுண்டு.
அப்போது வரை மிகவும் ஆரோக்கியமாக இருந்த ஒரு இளைஞர் ஒரேடியாக மயங்கி விழுந்தார். அவ்வாறு கண்ணிமைக்கும் நேரத்தில் உயிரிழப்பவர்கள் தொடர்பான வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருவதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட வீடியோக்கள் நிறைய வந்துள்ளன. புதியதாக இந்த வீடியோ நெட்டிசன்களை பயத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
சூரத்தில் உள்ள கோல்டு ஜிம் என்ற உடற்பயிற்சி நிலையத்தில் 33 வயது இளைஞர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். தினமும் செய்வது போலவே அந்த இளைஞர் பயிற்சி செய்தார். ஆனால் இதயத்தில் ஏதோ வலி அவரை வருத்தியது.
அதனால் அந்த ஜிம்மில் உள்ள படிக்கட்டுகளில் உட்கார்ந்தார். இதயத்தில் எரிச்சலாக இருந்தது. தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என்று நினைத்து தண்ணீர் குடித்தார். ஆனாலும் வலி சற்றும் குறையவில்லை. வலியால் துன்பப்பட்டுக் கொண்டே இருந்தவர் இறுதியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.
அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கீழே மயங்கி விழுந்த போதே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதயம் நின்று விட்டதால் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக அந்த இளைஞர் மரணித்ததாக மருத்துவர்கள் கூறினர். இந்த சம்பவம் அந்த ஜிம்மில் ஏற்பாடு செய்திருந்த சிசி கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக மாறியது.
முப்பத்தி மூன்று வயது சிறு வயதிலேயே மாரடைப்பால் இளைஞன் மரணித்ததால் அனைவருக்கும் கவலையையும் வருத்தத்தையும் அளித்துள்ளது.
ஆனால் அந்த இளைஞன் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்ததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாரடைப்பு என்றால் என்ன? இருந்தாற்போல் இருந்து இதயம் வேலை செய்வதை நிறுத்தி விடுவதையே மாரடைப்பு என்கிறார்கள். உடலில் அதற்கான எந்த அறிவிப்பும் இல்லாமலே இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
இதயத்தில் ஏற்படும் மின்சார அதிர்வுகளே இதற்கு காரணம். இந்த அதிர்வுகள் காரணமாக இதயம் அடித்துக் கொள்வதில் பேலன்ஸ் தாறுமாறாகி அதனால் ரத்தம் பாய்வதில் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக மூளை, இதயம், உடலிலுள்ள பிற பாகங்களுக்கு ரத்தம் பாய்வது நின்று போகிறது. இதன் காரணமாக நோயாளி நினைவிழந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு நாடி கூட நின்று போகிறது.