
~ செல்வ நாயகம்
“கோவிலை சுத்தம் செய்பவனும் அந்த கோவிலில் தெய்வத்துக்கு (deity) ஆராதனை செய்பவனும் சமம். இது தான் absolute platform. வேறெந்த இடத்திலும் சமத்துவம் கிடையாது. பாகுபாடுகள் உண்டு” – ஶ்ரீல பிரபுபாத ஸ்வாமி.
1896 செப்டம்பர் 1 அன்று கோல்கத்தாவில் பிறந்த ஶ்ரீல பிரபுபாத ஸ்வாமியின் 125ஆவது ஜயந்தி தினத்தை முன்னிட்டு நேற்று ரூ 125 நாணயத்தை வெளியிட்டு கௌரவித்தார் பிரதமர் மோதி.
இந்த மரியாதை அவருக்கு எப்போதோ செய்திருக்க வேண்டியது. இந்து விரோத காங்கிரஸ் செய்யாமல் விட்டது. மோதி ஜி அதை செய்துள்ளார். பிரதமருக்கு நன்றி
அபய சரண் என்பது அவரது இயற்பெயர். சந்நியாசம் எடுத்துக் கொண்ட போது ஶ்ரீல பக்திவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா என்ற பெயர் கிடைத்தது.
ஸ்காட்டிஷ் கல்லூரியில் தத்துவம் பயின்றார். ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் (கௌடிய வைஷ்ணவ) வழி வந்த தன் குரு ஶ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி மஹராஜை 1922இல் சந்தித்தார். ஆங்கிலம் பேசத்தெரிந்த ஶ்ரீல பிரபுபாதாவை மேற்கத்திய நாடுகள் சென்று பக்திமார்க்கத்தை உபதேசிக்க நியமித்தார். ஶ்ரீல பிரபுபாத ஸ்வாமி அதை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை.
காந்தியுடன் சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்தார். 1959இல் சந்நியாச ஆஷ்ரமம் ஏற்றுக் கொண்டார். தன் குருவின் வார்த்தைகளை பூர்த்தி செய்ய 1965இல், தன்னுடைய 65ஆவது வயதில், ஜலதூதா கப்பலில் அமெரிக்கா பயணித்தார் – ஶ்ரீமத் பாகவதம் உள்ளிட்ட சில புத்தகங்களுடனும் சொல்ப பணத்துடனும். ( https://tinyurl.com/jv9dezur )
அந்தப்பயணத்தின் போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட, பகவானுக்கு தன் ஆச்சாரியன் நியமித்த பணியை பூர்த்தி செய்ய கருணை புரிய வேண்டும் என தன் வேண்டுதலை கடிதமாக எழுதினார் டயரியில்…
பாஸ்டன் வந்து சேர்ந்த பிரபுபாத ஸ்வாமி நியூயார்க் சென்றடைந்தார். அங்கே பூங்காவில் தன்னந்தனியாக ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய… சில மணி நேரங்களில் பல அமெரிக்கர்களும் அவருடன் சேர்ந்து பாட ஆரம்பித்தனர்.
கிருஷ்ண பக்தர்கள் கூட்டம் சேர ஆரம்பித்தது.
1966இல் கிருஷ்ண பக்திக்கான ISKCON International Society for Krishna Consciousness இயக்கத்தை அமெரிக்காவில் நிறுவினார்.
கௌடிய வைஷ்ணவ வழக்கப்படி, பகவத் கீதை, ஶ்ரீமத் பாகவதம் ஆகியவற்றிலிருந்து உபந்யாசங்கள் செய்தார். அது தவிர ஹரிநாம சங்கீர்த்தனை பஜன்கள் – ஹரே கிருஷ்ணா மஹா மந்திரம்.
அவரது நியூயார்க் சீடர்களில் ஒருவர் அந்த புத்தகங்களின் ஆங்கில மொழியாக்கத்தை வேண்ட, மொழி பெயர்ப்பில் கவனம் செலுத்தினார். தினமும் சில மணி நேரங்களே உறக்கம். நாள் முழுக்க உபந்யாசம், பஜன், மொழி பெயர்ப்பு!
1967இல் பகவத் கீதை – உள்ளது உள்ளபடி (Bhagvad Gita – As It Is) என்ற மொழி பெயர்ப்பை வெளியிட்டார். இன்று வரை அந்தப் புத்தகத்தின் விற்பனைக்கு வேறெந்த புத்தகமும் இல்லை.
பகவத் கீதையை அடுத்து ஶ்ரீமத் பாகவதம், பக்தி ரசாம்ருத சிந்து, ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதா என . ஶ்ரீல பிரபுபாதா, “பகவத் கீதை தான் A-B-C-D. ஶ்ரீமத் பாகவதம் இளநிலை பட்டம். சைதன்ய சரிதாம்ருதா என்பது முதுநிலை பட்டம் (postgraduate)” என்பார். (https://tinyurl.com/9akjfy37)
அவர் மொழி பெயர்த்த நூல்கள் பல.
( https://prabhupadabooks.com ). அவை ஆடியோ-புக் வடிவிலும் கிடைக்கின்றன. அமல பக்த தாஸ் என்ற அமெரிக்கர் சிறப்பாக அவற்றை ஆடியோ புக் வடிவில் தந்திருக்கிறார். ஆன்லைனில் இலவசமாக கேட்கலாம். விலைக்கும் வாங்கலாம். (https://tinyurl.com/ure6hwvn).
பல மணி நேரங்கள் உபந்யாசங்கள் – கேள்வி பதில்களுடன். (https://prabhupadavani.org/audio/). அவற்றை சிரத்தையுடன் பதிவு செய்த அவரது சீடர்களுக்கு அநந்த கோடி நமஸ்காரங்கள்!
எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்கா, ஐரோப்பா முதல் சோவியத், ஈரான் என பல நாடுகளிலும் கோவில்களை நிறுவினார். அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் ஏராளம்.
இந்தியாவிலிருந்து சென்ற பிறர் – யோகாநந்த பரமஹம்ஸா, ஸ்வாமி ராமா உட்பட பலரும் – யோகா, தியானம் போன்றவற்றை பரப்பினர்.
யோகாநந்த பரமஹம்ஸா கிறிஸ்தவராக மதம் மாறினார். அவர்களது யோகா, தியான இயக்கங்கள் இப்போது இந்து விரோத அன்பு மார்க்கத்தவர் பிடியில். “ரிக் வேதத்தில் சேசப்பாவைத்தான் சொல்லியிருக்கிறது” என பிதற்றும் நடிகை மோகினி போல அவர்களும், “யோகா, தியானங்களில் சேசப்பாவைத்தான் சொல்லியிருக்கிறது” என சொல்லித் திரிகிறார்கள். ஆனால் இஸ்க்கான் தொடர்ந்து பல கோவில்களை திறந்தவண்ணம் உள்ளது.
“அடுத்த வேளைக்கு என்று எதுவும் வைத்துக் கொள்ளாமல் கோவில்கள் செலவிட வேண்டும். அடுத்த வேளைக்கு பகவான் கொடுப்பார்,” என்பார் பிரபுபாத ஸ்வாமி.
கிருஷ்ண பிரசாதத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் ஶ்ரீல பிரபுபாதா. ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகி ஸ்டீவ் ஜாப்ஸ் பணமில்லாமல் அவதிப்பட்ட காலத்தில் இஸ்க்கான் பிரசாதங்களை உண்டு உயிர்வாழ்ந்ததை பல முறை குறிப்பிட்டிருக்கிறார். அவரைப் போல பலர் உண்டு.
ஶ்ரீல பிரபுபாதாவின் இஸ்க்கானின் அடிப்படை கொள்கைகள்: புலால் மறுப்பு, போதை வஸ்துக்களுக்கு தடை, பிறன் மனை நோக்காதிருத்தல், சூதாட்டம் கூடாது. (இவை எல்லாம் பரீக்ஷித் மஹாராஜாவிடம் கலி புருஷன் கேட்டுப் பெற்ற இடங்கள்: புலால் உண்ணும் இடங்கள், போதை வஸ்துகள், பெண்கள் தவறாக நடத்தப்படும் இடங்கள், சூதாட்டம்.)
“குணத்தால் தான் ஒருவன் பிராமண, சத்திரிய, வைஸ்ய, சூத்திரன் ஆகிறான். பிறப்பால் அல்ல” என்பது ஶ்ரீல பிரபுபாத ஸ்வாமி கொள்கை. மறுக்கப்பட்ட நான்கையும் (No Meat eating, No Gambling, No Intoxication, No Illicit Sex) ஒப்புக் கொண்டு நடப்போருக்கு initiation (தீக்ஷை) உண்டு. நாமகரணம் சூட்டப்பட்டு, பூணூல் அணிவிக்கப்படும். சிகை (குடுமி) வைத்துக் கொள்ள வேண்டும்.
அவர்கள் – பிராமணர்கள் – எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அத்தனையும் விவரித்திருக்கிறார் ஸ்வாமி.
1975 / 76இல் மீண்டும் இந்தியா வந்தார் தன் கடைசி நாட்களை கழிக்க.
1977இல், தன் 80ஆவது வயதில், பகவான் திருவடிகளை அடைந்தார்.
அவரது உபந்யாசங்கள், மொழி பெயர்ப்புகள், புத்தகங்களால் ஈர்க்கப்பட்டு உலகெங்கும் இன்று ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் ஜெபிக்கிறார்கள்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே.