― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஎதிர்பார்ப்புக்கும் மேல் பூர்த்தி செய்து... 19 பதக்கங்களுடன் நாடு திரும்பும் பாராலிம்பிக் அணி!

எதிர்பார்ப்புக்கும் மேல் பூர்த்தி செய்து… 19 பதக்கங்களுடன் நாடு திரும்பும் பாராலிம்பிக் அணி!

- Advertisement -
tokyo paralympics

~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா வரலாறு படைத்தது. வீரர்கள் 19 பதக்கங்களைப் பெற்று நாடு திரும்பினர்…
ஜப்பானின் தலைநகரில், பாரா ஒலிம்பிக்கில், இந்தியா தனது சிறந்த பதக்க எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது, 19 பதக்கங்களுடன் இந்திய அணி நாடு திரும்புகிறது. இது அவர்களின் முந்தைய எண்ணிக்கையை விட அதிகம்.

5 தங்கப் பதக்கங்களும், 8 வெள்ளிப் பதக்கங்களும் ஆறு வெண்கலப் பதக்கங்களும் இந்தப் போட்டியில் இந்திய அணி பெற்றுள்ளது. இந்தியா 1968 முதல் 2016 வரை 12 பதக்கங்களை மட்டுமே வென்றது, ஆனால் டோக்கியோ பாராலிம்பிக்கில் இருந்து 19 பதக்கங்களுடன் நாடு திரும்புகிறது.

இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதல் 25 இடங்களுக்குள் வந்துள்ளது. 2018ஆம் ஆண்டு கோடைகால இளைஞர் ஒலிம்பிக்கில் பெற்ற 13 பதக்கங்களைக் காட்டிலும் அதிகம் பெற்று இப்போது சாதனை புரிந்துள்ளது. பாராலிம்பிக்கில் இந்தியாவின் மிகப் பெரிய 54 பேர் கொண்ட வலுவான அணி இம்முறை அனுப்பப்பட்டது. நிறைய பதக்கங்கள் பெறுவர் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தைவிட அதிகமாகவே பாரா விளையாட்டு வீரர்கள் டோக்யோவில் பதக்கங்களை வென்றனர்.பாரா ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் பதக்கம் வென்ற முதல் இந்தியரான பவினாபென் படேலுடன் இது தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் SH6 பிரிவில் கிருஷ்ணா நகர் வரலாற்று தங்கம் வென்றதும், SL4 பிரிவில் சுஹாஸ் யதிராஜ் ஐஏஎஸ் அதிகாரி வெள்ளி வென்றதால் இரண்டு பேட்மிண்டன் வீரர்கள் பதக்கங்களை வென்றனர்.

அவனி லேகாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் வென்றார்; சிங்கராஜ் ஷூட்டிங்கில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றார். இதனால் ஒரே நபர் பல பதக்கங்கள் பெற்ற சாதனையயும் இந்தியா இம்முறை செய்துள்ளது. பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல் பெண் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை டோக்கியோ பாராலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியாவின் கொடி ஏந்தியவர் அவனி லேக்கரா என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கம் வென்றவர்களின் முழு பட்டியல்

தங்கப் பதக்கங்கள்:

அவனி லேகாரா – பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்எச் 1
பிரமோத் பகத் – ஆண்கள் ஒற்றையர் எஸ்எல் 3 பேட்மிண்டன்
கிருஷ்ணா நகர் – ஆண்கள் ஒற்றையர் SH6 பூப்பந்து
சுமித் ஆன்டில் – ஆண்கள் ஈட்டி எறிதல் F64
மணீஷ் நர்வால் – கலப்பு 50 மீ பிஸ்டல் SH1

வெள்ளிப் பதக்கங்கள்:

பவினாபென் படேல் – பெண்கள் ஒற்றையர் வகுப்பு 4 டேபிள் டென்னிஸ்
சிங்ராஜ் – கலப்பு 50 மீ பிஸ்டல் SH1
யோகேஷ் கதுனியா – ஆண்கள் டிஸ்கஸ் F56
நிஷாத் குமார் – ஆண்கள் உயரம் தாண்டுதல் T47
மாரியப்பன் தங்கவேலு – ஆண்கள் உயரம் தாண்டுதல் T63
பிரவீன் குமார் – ஆண்கள் உயரம் தாண்டுதல் T64
தேவேந்திர ஜஜாரியா – ஆண்கள் ஈட்டி எஃப் 46
சுஹாஸ் யதிராஜ் – ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் எஸ்எல் 4

வெண்கலப் பதக்கங்கள்:

அவனி லேகாரா – பெண்கள் 50 மீ ரைபிள் 3 நிலைகள் SH1
ஹர்விந்தர் சிங் – ஆண்கள் தனிநபர் மீள் வில்வித்தை
ஷரத் குமார்- ஆண்கள் உயரம் தாண்டுதல் T63
சுந்தர் சிங் குர்ஜார் – ஆண்கள் ஈட்டி எறிதல் F46
மனோஜ் சர்கார் – ஆண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் எஸ்எல் 3
சிங்கராஜ் – ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் SH1

டோக்கியோ பாராலிம்பிக்கில் விளையாட்டு வாரியாக இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை

தடகளம் – 8
ஷூட்டிங் – 5
பூப்பந்து – 4
வில்வித்தை – 1
டேபிள் டென்னிஸ் – 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version