உண்மையான நண்பனை ஆபத்தில் தான் அறிய முடியும் என்று கூறுவார்கள். அது உண்மை தான்.
இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல சமயத்தில் விலங்குகளுக்கும் கூட கச்சிதமாக பொருந்துகிறது.
இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்தா நந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் காட்டெருமை ஒன்றை பத்துக்கும் மேற்பட்ட சிங்கங்கள் கடித்து தின்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
அந்த காட்டெருமை தன்னால் முடிந்த வரை அந்த கூட்டத்தில் இருந்து தப்பிக்க முயலுகிறது. ஆனாலும் ஒற்றை ஆளாய் சமாளிக்க முடியவில்லை.
அந்த நேரத்தில் சற்று தொலைவில் இருந்து வந்த மற்றொரு காட்டெருமை மற்ற சிங்கங்களை முட்டி மோதி தூக்கி எரிந்துவிட்டது. அச்சமடைந்த சிங்கங்கள் திசைக்கு ஒன்றாக ஓடியே விட்டன. சிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுவரை இந்த வீடியோவை 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.