கேப் டவுனுக்கு பிறகு பெங்களூரு டவுன்… தண்ணீர் டவுன் டவுன்! அதிர்ச்சி ரிப்போர்ட்

பூமியில் 70 % சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது.

கேப் டவுனுக்கு பிறகு தண்ணீர் தீரவிருக்கும் 11 நகரங்களின் பட்டியலில் பெங்களூரு இடம் பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் டவுன் அருகிலுள்ள கிரபவ் நகர விவசாயிகள் அமைப்பு உதவியதால் கேப்டவுனின் தண்ணீர்ப் பற்றாக்குறை அடுத்த சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேப் டவுனைப் போன்று விரைவில் தண்ணீர் தீரப் போகும் வாய்ப்புள்ள 11 நகரங்களுக்கு தண்ணீர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி, தண்ணீர் தீர்ந்து போகும் நகரங்களில் முதலாவதாக கேப் டவுன் நகரம் உள்ளது. அதற்கு அடுத்த படியாக தண்ணீர் தீர்ந்து போக வாய்ப்பு உள்ள நகரங்களின் பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரும்  இடம் பெற்றுள்ளது. பூமியில் 70% சதவீதம் நீர் இருந்தாலும், அதில் வெறும் 3% சதவீதம் மட்டுமே தூய்மையானதாக உள்ளது. உலகில் சுமார் ஒரு கோடி மக்கள் போதுமான தண்ணீர் கிடைக்காமல் துன்பப் படுகின்றனர்  என ஐ.நா., கூறுகிறது.