பிகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை குழாய்கள் ஏற்றப்பட்ட லாரி கவிழ்ந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலிகுரி-தில்லி தேசிய நெடுஞ்சாலை 57-ல் உள்ள ஜலால்கர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட காளி கோயில் அருகே அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பலியான 8 பேரும் ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர்கள். அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.சில்லிகுரியில் இருந்து ஜம்மு & காஷ்மீர் செல்லும் வழியில் குழாய்கள் ஏற்றப்பட்ட சரக்கு லாரி நான்கு வழிச்சாலையில் காளி கோயிலுக்கு வந்தபோது லாரி கவிழ்ந்தது. குழாய்கள் அவர்கள் மீது விழுந்ததில் 8 பேர் குழாய்களுக்கு அடியில் சிக்கி பலியாகினர்.
விபத்து நடந்த இடத்தில் உடனடியாக மீட்பு பணியை துவக்கி, இறந்தவர்களின் உடல்களை மீட்கப்பட்டது.
காயம் அடைந்தவர்களை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.விபத்திற்குப் பிறகு, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க காவல் துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.