லடாக்-ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் பலி,பலர் காயம்..

Published:

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது. 26 ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஷியோக்
ஆற்றில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. 26 வீரர்களுடன் சென்ற ராணுவ வாகனம் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் முயற்சி நடந்து வருகிறது.

மேலும் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது மீதமுள்ள 19 ராணுவ வீரர்களும் விமானம் மூலம் சண்டிமந்திர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்பு விபத்திற்கான காரணம் வெளியாகும்.

இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளதாவது,
பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் தோய்ஸ் பகுதிதியில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்து தடுமாறு ஷியோக் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்தததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.இந்த விபத்து குறித்து தெரிந்ததும் பிரதமர் மோடி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை வழங்க மேலும் ராணுவவீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

images 27 2 - 2026
whatsapp image 2022 05 27 at 5 51 17 pm - 2026
whatsapp image 2022 05 27 at 5 51 18 pm - 2026
ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img