ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ரம்பன் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் நிலச்சரிவு மற்றும் பாறைகளும் விழுந்துள்ளன. இதனால்,ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளோடு அனைத்து கால நிலையிலும் இணைக்கு ஒரே சாலையான இதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.