மகாராஷ்டிரத்தில் வெவ்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது நேர்ந்த விபரீதத்தில் 20 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “ கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கிய விநாயகர் சதுர்த்தி கொண்டட்டம் நேற்று வரை நீடித்தது. இந்த விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்தில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வில் பலர் உயிரிழந்துள்ளனர்.
வார்தா மாவட்டத்தில் சவாங்கி பகுதியில் விநாயகர் சிலையினை கரைக்க முயன்ற 3 பேர் துரதிருஷ்டவசமாக உயிரிழந்தனர். அதேபோல தெல்வி பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். யவாத்மால் மாவட்டத்தில் குளத்தில் சிலையினை கரைக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். அகமது நகர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் சிலைகளை கரைக்க முயன்ற இருவர் உயிரிழந்தனர். அதேபோல விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.” என்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் விநாயகர் சிலைகளை கரைக்க முயன்ற 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.