
பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலம் தொலைவில் இல்லை என கர்நாடகாவில் இன்று ஷிமோகா மாவட்டம், ஷிகாரிபுராவில் புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து பேசினார்.இது கர்நாடகாவில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும் .
கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் 450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இந்த விமான நிலையம், கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையமாகும். முன்னதாக ஷிவமொக்கா விமான நிலையத்தின் மாதிரியை பிரதமர் மோடி பார்வையிட்டார். ஷிவமொக்கா விமான நிலையத்தின் பயணிகள் கட்டிடம் பாஜவின் கட்சி சின்னம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் 300 பேர் விமான நிலையத்திற்குள் வந்து செல்லும் திறனுடன் இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இன்று முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 80-வது பிறந்தாளையொட்டி நிகழ்ச்சி மேடையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து அவர் பேசியதாவது,

- வரும் காலங்களில் இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான விமானங்கள் தேவைப்படும். பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

- இரட்டை எஞ்சின் அரசு சிறப்பாக செயல்படுகிறது. ஷிவமொக்காவில் அமைந்துள்ள இந்த விமான நிலையம் நகரங்களுக்கு இடையேயான இணைப்பை அதிகரிக்கும். கர்நாடகாவின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், திறந்து வைக்கவும் வந்துள்ள வாய்ப்பை நான் பாக்கியமாக கருதுகிறேன்.
- ஷிவமொக்காவுக்கு சொந்த விமான நிலையம் கிடைத்துள்ளது. இது பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கிறது. இந்த விமான நிலையம் மாநில இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும். கர்நாடகாவின் பிரபல தலைவர் எடியூரப்பாவின் பிறந்தநாள்.அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
- இதையடுத்து ரூ.190 கோடி செலவில் மறுவடிவமைக்கப்பட்ட பெலகாவி ரயில் நிலைய கட்டிடத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.930 கோடியிலான லோண்டா-பெலகாவி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு ஷிவமொக்கா மற்றும் பெலகாவி மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.