இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.மாணவர்கள் இளநிலை நீட் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.https://neet.nta.nic.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை நீட் தேர்வு மே7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வுக்கு இன்று மார்ச் 6முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் தேசிய தேர்வு முகமையின் (https://neet.nta.nic.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.