
இயற்கையின் வண்ணங்கள் பெண்மையின் எண்ணங்கள்,மயக்கம் தரும் வண்ணங்களில் ஒளிர்விடும் வண்ண மயில் போன்ற அழகே உருவாகத் திகழும் ஹோலி கலர் சாயம் உடல் முழுவதும் பூசி வரும் பெண்கள் பார்க்க பார்க்க அழகாக இருப்பார்கள்.ஹோலிக்கு பல கதைகள் உள்ளன.
இரண்யகசிபுவின் சகோதரி அரக்கி ஹோலிகா இளம் பிரகலாதனை நெருப்பில் போட்டு எரிக்க முயன்ற போது, விஷ்ணு மீது விடாப்பிடியான பக்தி கொண்ட பிரகலாதன், எவ்விதக் காயமும் இன்றி உயிர் பிழைத்தான். அதில் வியக்கத் தக்க வகையில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்! இதன் மூலம் நன்மை, தீமையை வென்றதாகக் கருதப்படுகிறது.

பார்வதிதேவி சிவ பெருமானை மணப்பதற்கு உதவும் பொருட்டு சிவபெருமானின் மீது காதல் கடவுளான காமதேவன் தன் பூக்கணையைச் செலுத்தி சிவன் தவத்தைக் கலைத்த போது காமனின் உடல் எரிந்து அழிந்தது. பின் மனைவி ரதி வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். இனி உன் உடலால் இச்சை கொள்ள முடியாது, உள்ளத்தால் மட்டுமே அன்பை வெளிப்படுத்த முடியும் எனக் கூறி அருவ உருவம் வழங்கினாராம்.
புராணங்களின் உட்கருத்து நமக்கு முக்கியம்!இதன் மூலம் காமம், க்ரோதம், வெறி, பேராசை போன்ற உணர்ச்சிகளைக் களைந்து, வாழ்வில் நல்லிணக்கம், மனித நேயம், அன்பு, சுற்றம், உறவு முறைகளை சமச்சீராக எடுத்துக் கொள்ள வழி வகுக்கிறது.
நெருப்பு மூட்டிய ஹோலி தகனத்தில் வண்ண மயமான இளமை, காதல் உணர்வோடு கொண்டாடுகிறோம்.ஒளியின் திருவிழாவான ஹோலியன்று வேறுபட்ட அலைகள் கொண்ட ஒளிக்கதிர்கள் அண்டமெங்கும் பரவுகின்றன. இதனால் பல்வேறு வண்ணங்கள் தோன்றி மனித இனச் செயல்பாட்டிற்கு ஊட்டமும் முழுமையும் அளிக்கின்றன.