பிகார் மாநிலம் கயாவில் ராணுவ பயிற்சியின் போது இடம் மாறி தவறி விழுந்த வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் புதன்கிழமை ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர் மற்றும் ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தை உறுதி செய்த பாரசட்டி காவல் நிலைய அதிகாரி, மாவட்டத்தில் உள்ள பாரசட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட குபேர் பிண்ட் கிராமத்தில் ராணுவ பயிற்சியின் போது காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள் கயாவில் உள்ள மகத் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கயா காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ராணுவ பயிற்சியின் போது இலக்குத் தவறி, தவறுதலால பொதுமக்கள் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது என தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.