
இந்தியாவில் இன்புளூயன்சா எச்3என்2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எச்3என்2 இன்ப்ளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சலால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று வீதம் காய்ச்சல் முகாம்கள் நடந்தன. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மருத்துவர், மருந்தாளுனர், நர்சு, உதவியாளர் என 4 பேர் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். காலை 9 மணிக்கு மருத்துவ முகாம்கள் தொடங்கின. காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, ரத்த சோகை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட அனைத்து வியாதிகளுக்கும் இந்த முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டன.