- Ads -
Home இந்தியா அறநிலையத் துறை ஆகம ஆலயங்களில் அர்ச்சகர் நியமனம்; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அறநிலையத் துறை ஆகம ஆலயங்களில் அர்ச்சகர் நியமனம்; உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

ஆகம கோயிலில் தமிழக அரசு எந்த ஒரு பணி நியமனத்தையும் செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கினை ஒத்தி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்
உள்ள திருக்கோயில்கள் மூலம் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி என்று அழைக்கப்படும் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அல்லது ஏற்கனவே படித்துவிட்டு இருக்கும் மாணவர்களுக்கு பழனி, திருவண்ணாமலை, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி போன்ற திருக்கோயில்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டு பணி அனுபவம்
பெறவும், மேலும் அவர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 8000 தருவதற்கும் ஆணை பிறப்பித்து இருந்தது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் சார்பாக தொடுக்கப்பட்ட பல வழக்குகளில் கடந்த 2022 வருடம் ஆகஸ்ட் மாதம் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி மற்றும் நீதியரசர் மாலா அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் கோயில்களில் ஆகம முறைப்படியே ஆதி சைவர்/ பட்டாச்சாரியார்கள் பணி அமர்த்த பட வேண்டும் என்று கூறியது. மேலும் ஆகமத்திற்கு விரோதமாக பணி அமர்த்தபடுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும் கூறியது.

2021 ஆம் ஆண்டு தமிழக அரசினால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் ஆகமத்தில் கூறப்பட்ட விதிகளுக்கு முரணாக பணி அமர்த்துப்பட்டு இருந்தால் அவர்களுடைய பணி செல்லுபடியாகாது என்றும் கூறியது.

ALSO READ:  சிவகாசி அருகே அகழாய்வில் காளை உருவம் கண்டெடுப்பு!

மேலும் ஆதி சைவர்/ பட்டாச்சாரியார்கள் மட்டும் கோயிலில் பணி அமர்த்தப்படுவது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 16 ன் படி விரோதமானது கிடையாது என்றும் கூறியிருந்தது.

அதனை தொடர்ந்து வயலூர் முருகன் கோயிலில் ஆகம விதிகளுக்கு விரோதமாக பணி அமர்த்தப்பட்ட ஆதி சைவர் அல்லாத அர்ச்சகர் பயிற்சி பெற்ற இருவரை பதவி நீக்கம் செய்ய அந்த கோயிலின் சிவாச்சாரியார்கள் நீதி மன்றத்தினை அணுகினர். அந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றமானது, ஆதி சைவர் அல்லாதவர்கள் கோவிலில் பூஜை செய்வது ஆகம விதிகளுக்கு விரோதமானது என்று தீர்ப்பு கூறி, அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் படித்த அந்த இரு மாணவர்களையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணி செய்ய 2018 ஆம் ஆண்டு வந்த விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஆனது கடந்த 2023 ஜூன் மாதம் தீர்ப்பு கொடுத்தது.

அந்த வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்பினை முறையாக கருத்தில் கொள்ளாமல், ஆகமம் படித்தவர்கள் ஜாதி பாகுபாடு இன்றி பணி அமைத்தப்படலாம் என்பதாக தீர்ப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இது அரசியல் அமைப்பு சட்டத்தின் சரத்து 16 (5) க்கு முற்றிலும் முரணானதாகும்.

ஷரத்து 16(5) ஆனது அரசின் கீழுள்ள எந்த அலுவலகத்திலும் பணி நியமனம் குறித்த விவகாரங்களில் எல்லா குடிமகன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்
என்று கூறுகிறது.

ALSO READ:  பாஜக., ஆட்சியில்தான் 7 மடங்கு அதிக நிதி! ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் கடிதம்!

எனினும் இந்த சரத்தின் விதிவிலக்காக ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள், பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது என்று இருக்கிறது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யபட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மனுதாரர் சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யபட்டு இருந்தது. ஆகமம் படித்தவர்கள் ஜாதி பாகுபாடு இன்றி பணி அமைத்தப்படலாம் என்ற தீர்ப்பிற்கு தடை உத்தரவு தர தாமதம் ஆனதால் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

அந்த வழக்கில் உச்ச நீதி மன்றமானது சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் பணி நியமனம் செய்யக்கூடாது என்று தீர்ப்பு கூறி தடை உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின்
கீழ் உள்ள கோயிலில் உள்ள மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டு பணி அனுபவம் பெற கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆணையானது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், ஏற்கனவே கொடுக்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிராக இருப்பதால் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது.

ALSO READ:  15 ஆண்டுகளுக்குப் பின், சங்கரன்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் A.S போபண்ணா மற்றும் நீதியரசர் M.M சுந்தரேஷ் அமர்வு இன்று விசாரித்தது. ஆகம கோயிலில் தமிழக அரசு எந்த ஒரு பணி நியமனத்தையும் செய்யக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கினை ஒத்தி வைத்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வள்ளியப்பன் ஆஜரானார்கள்

Senkottai Sriram
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். | தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். | சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். | * வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். | விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. | இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version