
கொரிய புராணத்தின் படி, அயோத்தியைச் சேர்ந்த இளவரசி ஒருவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படகில் கடலைக் கடந்து, கொரியாவுக்கு 4,500 கிலோமீட்டர் பயணம் செய்து, வட ஆசிய நாட்டில் கயா இராச்சியத்தை நிறுவிய கிம் சுரோவை மணந்தார். இளவரசி, சூரிரத்னா, பின்னர் ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் ஆனார்.
இந்தக்கதை இந்தியாவில் அரிதாகவே அறியப்படுகிறது, அல்லது தென் கொரியாவில் சுமார் 60 லட்சம் மக்கள் தங்களை சூரிரத்னாவின் வழித்தோன்றல்களாகக் கருதுகிறார்கள், அயோத்தியை தங்கள் தாய்வீடாகக் கருதுகிறார்கள். எனவே அவர்களில் பலர் ஜனவரி 22 அன்று தங்கள் வீடுகளில் இருந்து ஆன்லைனில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை ஆர்வத்துடன் பார்த்தது இயல்பான ஒரு செய்தியாகிப் போனது.
இப்போது அவர்கள், அயோத்தியில் பிரமாண்டமான புதிய ராமர் கோவில் வளாகத்தை அருகில் இருந்து பார்ப்பதற்காக நெடுநாட்கள் காத்திருக்க முடியாது. அதனால் இந்தியர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சாரிசாரியாக அயோத்திக்கு வருகிறார்கள்.
காரக் குலத்தைச் சேர்ந்த பலர் ஒவ்வோர் ஆண்டும் அயோத்திக்கு வருகின்றார்கள். உத்தரப்பிரதேசம் தென்கொரியா இடையேயான கூட்டு முயற்சியில் 2001 ஆம் ஆண்டு அயோத்தியில் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்ட ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் ராணியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
அரசாங்கம் மற்றும் தென் கொரியாவில் உள்ள கிம்ஹே நகரம் இந்த வகையில் நெருங்கிய தொடர்புடன் திகழ்கிறது.
மத்திய காரக் கிளான் சொசைட்டியின் பொதுச்செயலாளர் கிம் சில்-சு இதுகுறித்துக் கூறுகையில், “அயோத்தியை நாங்கள் எங்கள் பாட்டியின் வீடாகப் பார்ப்பதால் எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்றார். அயோத்தியில் உள்ள ராணி ஹியோ மெமோரியல் பூங்காவிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலில், ஜன.22 அன்று நடைபெற்ற ராம் லல்லாவின் புதிய விக்ரஹத்தின் ‘பிராணப்பிரதிஷ்டா’ விழாவில் கலந்து கொண்டவர்களில் அவரும் ஒருவர்.
2,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்தப் பூங்காவில் தியான மண்டபம், ராணி மற்றும் அரசருக்கு அர்ப்பணிக்கப்பட்ட அரங்குகள், பாதைகள், நீரூற்று, சுவரோவியங்கள் மற்றும் ஆடியோ வீடியோ வசதிகள் உள்ளன. பெவிலியன்கள் டைல்ஸ் சாய்வான கூரையுடன் வழக்கமான கொரிய பாணியில் கட்டப்பட்டுள்ளன.
“ஒவ்வோர் ஆண்டும் அயோத்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருகிறோம், இந்த முறையும் புதிய ராமர் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளோம். விழாவை ஆன்-லைனில் பார்த்தோம், என்ன ஓர் ஆனந்தமயமான உணர்வு. நான் பழைய தற்காலிக கோவிலுக்கு சென்றதில்லை. ஆனால் இந்தக் கோயிலின் வரலாற்று இடையூறுகள் தகராறுகள் பற்றி படித்துள்ளேன்,” என்றார் யு-ஜின் லீ. வரும் பிப்ரவரியில் 22 பேருடன் அயோத்திக்கு வர திட்டமிட்டுள்ளதாக, யு-ஜின் லீ, தென் கொரியாவில் இருந்து தொலைபேசியில் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
ராணி ஹியோ ஹ்வாங்-ஓக் கிம்ஹே ஹியோ குடும்பங்களின் முன்னோடித் தாயாக மதிக்கப்படுகிறார், பண்டைய கொரிய வரலாற்று நூலான “சம்குக் யூசா”, ராணி கி.பி 48 இல் கொரியாவிற்கு “அயோத்யா”விலிருந்து வந்ததாகக் கூறுகிறது. காரக் குலத்தின் கிம்ஹே ஹியோ குடும்பங்களின் முன்னோடித் தாயாக அவர் இன்றும் போற்றப்படுகிறார்.
எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், தென் கொரிய தூதரகம் ஜனவரி 22 அன்று நடந்த புனித விழாவிற்கு இந்தியாவை வாழ்த்தியுள்ளது. “இந்த இடம் கொரியா-இந்தியா உறவுகளுக்கு ராணி ஸ்ரீரத்னா (ஹியோ ஹ்வாங்-ஓக்) இடையேயான திருமண இணைப்பின் அடிப்படையில் ஒரு பெரிய அடையாள முக்கியத்துவம் வாய்ந்தது. கி.பி 48 இல் கயா (கொரியா) வில் இருந்து அயோத்தி மற்றும் கிம் சுரோ,” என்று குறிப்பிட்டது.
2015 ஆம் ஆண்டில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் இந்த நினைவிடத்தை விரிவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தென் கொரிய முதல் பெண்மணியான அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக், 2018 ஆம் ஆண்டு இந்தப் பூங்கா அழகுபடுத்தும் பணியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். 2019 ஆம் ஆண்டில், ராணியின் நினைவாக ₹25 மற்றும் ₹5 அஞ்சல் தலைகளும் இந்தியாவால் வெளியிடப்பட்டன.
தென் கொரியாவில் தூதராகப் பணியாற்றிய இந்திய தூதர் என் பார்த்தசாரதி, சூரிரத்னாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை எழுதினார், “கொரியாவில் உள்ள அயோத்தி இளவரசியின் புராணக்கதை. இது கொரிய மொழியில் “பி டான் ஹ்வாங் ஹூ” அல்லது சில்க் இளவரசி என்று மொழிபெயர்க்கப்பட்டது. இது, சியோலில் வெளியிடப்பட்டது. பின்னர், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகள் புத்தகத்தை வெளியிட்டது.