- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இருபத்தியொன்பதாம் நாள்
ஐபிஎல் 2024 – 19.04.2024
சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
சென்னை அணி (176/7, ரவீந்திர ஜதேஜா 57*, அஜிங்க்யா ரஹானே 36, மொயின் அலி 30, தோனி 28, க்ருணால் பாண்ட்யா 2/16) லக்னோ அணியிடம் (கே.எல்.ராகுல் 73*, க்விண்டன் டி காக் 54, கே.எல். ராகுல் 82, நிக்கோலஸ் பூரன் 23) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இன்று லக்னோவில் லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை அணியில் இன்றும் தொடக்க வீரராக அஜிக்யா ரஹானே களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா (பூஜ்யம் ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
அஜிங்க்யா ரஹானே 8.1ஆவது ஓவர் வரை விளையாடி 24 பந்துகளில் 36 ரன் சேர்த்தார். ரச்சின் ஆட்டமிழந்ததும் விளையாடவந்த ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகள் விளையாடி 17 ரன்கள் சேர்த்து 4.2ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர், அதாவது ஐந்தாவது ஓவரில் விளையாட வந்த ஜதேஜா கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 57 ரன் எடுத்தார்.
ஷிவம் துபே (3 ரன்) மாற்றும் சமீர் ரிஸ்வி (1 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை. மொயின் அலி (20 பந்துகளில் 30 ரன்) மற்றும் மஹேந்திரசிங் தோனி (9 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் ஜதேஜாவுக்குத் துணை நின்றனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது.
177 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (54 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (82 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.
இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில் மேலும் சிறப்பாக விளையாடி நிக்கோலஸ் பூரன் (23 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (8 ரன்) இருவரும் லக்னோ அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 19 ஓவர்களில் லக்னோ அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் அணித்தலைவர் கே.எல். ராகுல் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
19.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 7 | 6 | 1 | 12 | 0.667 |
கொல்கொத்தா | 6 | 4 | 2 | 8 | 1.399 |
சென்னை | 7 | 4 | 3 | 8 | 0.529 |
ஹைதராபாத் | 6 | 4 | 2 | 8 | 0.502 |
லக்னோ | 7 | 4 | 3 | 8 | 0.123 |
டெல்லி | 7 | 3 | 4 | 6 | -0.074 |
மும்பை | 7 | 3 | 4 | 6 | -0.133 |
குஜராத் | 7 | 3 | 4 | 6 | -1.303 |
பஞ்சாப் | 7 | 2 | 5 | 4 | -0.251 |
பெங்களூரு | 7 | 1 | 6 | 2 | -1.185 |