
- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
34ம் நாள் – ஐபிஎல் 2024 – 24.04.2024
டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத டைடன்ஸ்
டெல்லி அணி (224/4, ரிஷப் பந்த் 88*, அக்சர் படேல் 66, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26*, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 23, பிருத்வி ஷா 11, சந்தீப் வாரியர் 3/15) குஜராத் அணியை (220/8, சாய் சுதர்ஷன் 65, டேவிட் மில்லர் 55, விருத்திமான் சாஹா 39, ரஷீத்கான் 21*, சாய் கிஷோர் 13 ரசிக் கான் 3/44, குல்தீப் யாதவ் 2/29) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. டெல்லிய அணியின் தொடக்க வீரர்களாக ப்ருத்வி ஷா (11 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (14 பந்துகளில் 23 ரன்) இருவரும் களமிறங்கினர். ஷா 3.5ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின்னர் ஆடவந்த அக்சர் படேல் (43 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ஆயினும் ஷாய் ஹோப் (5 ரன்) 5.4ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ரிஷப் பந்த் (43 பந்துகளில் 88 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (7 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கடைசி ஓவரில் ரிஷப் பந்த் 4 சிக்சரும் ஒரு ஃபோரும் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 31 ரன் அடிக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கட் இழப்பிற்கு 224 ரன் எடுத்திருந்தது.
2225 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் (6 ரன்) இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சாஹா 9.4ஆவது ஓவர் வரை ஆடி 39 ரன் சேர்த்தார். அவருடன் சாய்சுதர்ஷன் (39 பந்துகளில் 65 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று டேவிட் மில்லர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 23 பந்துகளில் 55 ரன் எடுத்தார்; அதில் 6 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். அசமத்துல்லா ஒமர்சாய் (1 ரன்), ஷாருக் கான் (8 ரன்), ராகுல் திவாத்தியா (4 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை. 17ஆவது ஓவர் தொடக்கத்தில் விளையாட வந்த ரஷீத் கான் இறுதி வரை வெற்றிக்கு முயற்சி செய்தார்.
20ஆவது ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத்கான் இரண்டு ஃபோர்கள் ஒரு சிக்சர் அடித்தார். அதனால் கடைசிப் பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 220 ரன் மட்டுமே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியின் அனித்தலைவர் ரிஷப் பந்த் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
24.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்
அணி | ஆ | வெ | தோ | புள்ளி | நெட் ரன் ரேட் |
ராஜஸ்தான் | 8 | 7 | 1 | 14 | 0.698 |
கொல்கொத்தா | 7 | 5 | 2 | 10 | 1.206 |
ஹைதராபாத் | 7 | 5 | 2 | 10 | 0.914 |
லக்னோ | 8 | 5 | 3 | 10 | 0.148 |
சென்னை | 8 | 4 | 4 | 8 | 0.415 |
டெல்லி | 9 | 4 | 5 | 8 | -0.386 |
குஜராத் | 9 | 4 | 5 | 8 | -0.974 |
மும்பை | 8 | 3 | 4 | 6 | -0.227 |
பஞ்சாப் | 8 | 2 | 6 | 4 | -0.292 |
பெங்களூரு | 8 | 1 | 7 | 2 | -1.046 |