- Ads -
Home இந்தியா தடுப்பூசி விவரங்களைக் காண… இணைய தளம்!

தடுப்பூசி விவரங்களைக் காண… இணைய தளம்!

நாடு முழுதும், வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விவரங்களை, டிஜிட்டல் முறையில் பராமரிக்கும் வகையில், ஆகஸ்ட் இறுதியில், 'யு - வின்' இணையதளம் நடைமுறைக்கு வரும் என, தகவல் வெளியாகி உள்ளது.

நாடு முழுதும், வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விவரங்களை, டிஜிட்டல் முறையில் பராமரிக்கும் வகையில், ஆகஸ்ட் இறுதியில், ‘யு – வின்’ இணையதளம் நடைமுறைக்கு வரும் என, தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு முடிவு : கொரோனா தடுப்பூசி விபரங்களை பதிவு செய்ய, மத்திய அரசின் சார்பில், கோ – வின் என்ற இணையதளம் துவங்கப்பட்டது. இதையடுத்து, வழக்கமாக செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்த விபரங்களை பதிவு செய்ய புதிய இணைய தளத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, மேற்கு வங்கத்தை தவிர, நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், தடுப்பூசிகள் செலுத்தப்படும் விபரங்களை பதிவு செய்ய, யு – வின் என்ற இணையதளம், சோதனை அடிப்படையில், கடந்த ஜனவரியில் துவங்கப்பட்டது.

ALSO READ:  உசிலம்பட்டி: விநாயகருக்கு படைத்த ஒரு லட்டு, ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு ஏலம்!

கடந்த 9ம் தேதி நிலவரப்படி, யு – வின் இணையதளத்தில், 5.33 கோடி பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். மேலும், 83.55 லட்சம் தடுப்பூசி முகாம்கள் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டு, 18.15 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த நடைமுறையை, அடுத்த மாத இறுதியில், நாடு முழுதும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில், தடுப்பூசி செலுத்தப்படும் பதிவுகள் கையேடுகளில் பராமரிக்கப்படுகின்றன. இவற்றை பராமரிப்பது கடினமாக உள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்படும் விபரங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. இந்த பிரச்னைகளை, யு- – வின் இணையதளம் போக்கும்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழைப் போலவே, கியூ.ஆர்., குறியீடு அடிப்படையில், டிஜிட்டல் முறையில் சரிபார்க்கக்கூடிய -தடுப்பூசி சான்றிதழை, இந்த இணையதளம் வழங்கும். இதை குடிமக்கள் எந்த நேரத்திலும் அணுகலாம்.

நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி நிகழ்வை, யு – வின் இணையதளம் பதிவு செய்கிறது.

ALSO READ:  மதுரை மாவட்ட கோவில்களில் கந்த சஷ்டி விழா!
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version