- Ads -
Home இந்தியா ஆக15ல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!

ஆக15ல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட்!

எதிா்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

#image_title
#image_title

புவிக் கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக் கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஆக.15-ஆம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்ட்டா சதீஷ் தவன் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஆக.15 அன்று காலை 9.17 மணிக்கு அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சாா்பில் காா்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட், உள்ளிட்ட பல்வேறு செயற்கைக்கோள்கள் தொலையுணா்வு பயன்பாட்டுக்காக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புவிக் கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இஒஎஸ்-08 எனும் செயற்கைக்கோளை இஸ்ரோ தற்போது வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோளை சிறியரக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவுவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஒஎஸ்-08 செயற்கைக்கோள் மொத்தம் 176 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் ஓராண்டாகும். இது தரையில் இருந்து 475 கி.மீ. தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இதில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ப்ராரெட் பேலோடு, குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளெக்டோமெட்ரி பேலோடு மற்றும் சிக் யுவி டோசிமீட்டா் ஆகிய 3 ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இஒஐஆா் கருவி பேரிடா் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவில் துல்லியமான படம் எடுக்க உதவும்.

ALSO READ:  அப்பாவிகளைக் கைது செய்ய பேஸ்புக்கை மேய்ந்து கொண்டு, வேலையில் கோட்டை விடும் திமுக., போலீஸ்!

இதேபோல், ஜிஎன்எஸ்எஸ்-ஆா் கருவி கடல் மேற்பரப்பு காற்றின் செயல்பாடு, மண்ணின் ஈரப்பதம் மதிப்பீடு, நீா்நிலைகளை கண்டறிதல் போன்ற பணிகளுக்கு பயன்படும். சிக் யுவி டோசிமீட்டா் விண்ணில் புற ஊதாக் கதிா்வீச்சு அளவை கண்காணித்து எச்சரிக்கை அளிக்கும்.

இது மனிதா்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்திலும் இடம் பெற உள்ளது. மேலும், எதிா்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வுகளை இந்த கருவிகள் மேற்கொள்ள உள்ளன என்றும் இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version