ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் நிகழ்த்திய நாகபுரி விஜயதசமி (2024 அக்டோபர் 12) விழா பேருரை…. தொடர்ச்சி…
நல்லிணக்கமும் நல்லெண்ணமும்
சமுதாயம் ஆரோக்கியமாக வலுவுடன் திகழ்கிறது என்பதற்கு அடையாளம், நல்லிணக்கம் நிலவுவதுடன், பலதரப்பட்ட மக்கள் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் நல்லெண்ணத்தை பரிமாறிக் கொண்டு வாழ்வார்கள். நாடகபாணியில் சில நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் இந்த நிலை வந்து விடாது. சமுதாயத்தின் எல்லா பிரிவினர், எல்லா நிலையினர் இடையேயும் நட்புறவு நிலவ வேண்டும். குடும்பங்கள் குடும்பங்களுடனும் தனிநபர் தனிநபருடனும் அன்போடு பழகி வந்தால்தான் தான் சாத்தியமாகும். தனி மனித அளவிலும் குடும்ப அளவிலும் இந்த முன்னெடுப்பில் நாம் அனைவருமே ஈடுபட வேண்டும். ஒருவர் பண்டிகையில் மற்றவர் கலந்து கொள்வது, என்று பரஸ்பர மதிப்பளித்து கலந்துறவாடி எல்லா பண்டிகைகளையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் திருவிழாகள் ஆக்கிவிட வேண்டும்.. கோவில், நீர் நிலைகள் மயானம் ஆகியவை அனைவருக்கும் பொது என்றும், அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்கும் உரியவை என்ற சூழல் வரவேண்டும்.
சூழ்நிலைகளைப் பொறுத்து ஒரு பிரிவினருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று சமுதாயத்தில் எல்லா பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் எப்படி வலுவானவர்கள், பலவீனர்களுக்கு கூடுதல் சௌகரியம் செய்து கொடுப்பார்களோ, தன் வலியையும் பாராமல் ஆதரவாக இருப்பார்களோ, அதுபோலவே நம்மவர் என்ற அதே உணர்வுடன் சமுதாயத்திலும் வலியவர்கள் வறியவர்களுக்கு உதவவேண்டும். சமூகத்தில் அனைத்து சாதிகளுக்கும் அவரவர் சாதி சங்கமும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களும், சமுதாயக் கூடங்களும் இருக்கும். அந்தந்த சாதிகளின் நலன்களை பேணி அவர்களுக்குத் தேவையான விஷயங்களை செய்வதே இந்த சங்கங்களின் தலையாய கடமை. சாதி சங்கங்கள் கூடிப்பேசும் போது கூடுதலாக இரண்டு விஷயங்களை பற்றி அவர்கள் தொடர்ந்து விவாதிப்பார்களேயானால் சமுதாயத்தை பிளவுபடுத்தும் எந்த சக்தியும் வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போகும். அதில் முதல் விஷயம், நாட்டின் நலனையும், சமூக நலனையும் கருதி அனைத்து சாதிக் குழுக்களையும் இணைத்து நாம் என்னென்ன விஷயங்கள் செய்யலாம், எப்படி அவற்றை திட்டங்கள் அமைத்து செயல்படுத்தலாம் என்று விவாதிக்கவேண்டும். இரண்டாவது, நம்மில் நலிந்த மக்களுக்காக, சாதிகளுக்காக, நாம் அனைவரும் இணைந்து என்னென்ன செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனை செய்யவேண்டும். இது போன்று தொடர்ந்து எண்ணி, செயல்பட்டும் வந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்குவதுடன் நல்லெண்ணமும் மலரும்.
சுற்றுச்சூழல்
நாலாபுறமும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த செய்திகளை காண்கிறோம். உலகு தழுவிய அந்த பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகநமது நாட்டிலும் பாதிப்பு ஏற்படுத்திவருகிறது. இயற்கை சீற்றத்தின் தாக்கத்தை பார்க்கிறோம். சமீப காலமாக இவை நடக்கின்றன பருவநிலை சீற்றம் மிகுந்ததாக மாறிவிட்டது. பொருளாதார முன்னேற்றம் என்ற பேரில் போகம், நகரமயமாதல் ஆகியவற்றை அடிப்படை சித்தாந்தமாக கொண்டு, அனைத்து படைப்பையும் அழிவின் பாதையில் அழைத்துச் செல்லும் வேலையை செய்கிறது மனிதகுலம். நமது பாரத தேசத்தின் பாரம்பரிய வழியில், அனைத்து உயிர்கள் மற்றும் இயற்கை வளங்களை, ஒரே உயிர் என்ற உணர்வின் அடிப்படையில் கொண்டு வளர்ச்சிப் பாதையை வகுத்திருக்க வேண்டும் ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இது பற்றி பேச்சு அடிபடுகிறது. மேலோட்டமாக சில விஷயங்க.ள் ஏற்கப்பட்டுள்ளன. நிலவரமும் மாறி வருகிறது. செயலில் அதிகம் காணோம். வளர்ச்சி என்ற பேரில் போட்ட அழிவுப் பாதையின் கொடிய தாக்கத்தை நாமும் அனுபவிக்கிறோம். அதிக வெயில், வறட்சியை தருகிறது. மழை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது, குளிர்காலம் உறைந்து விடுவதைப் போல் காண்கிறோம். காலநிலையின் தீவிரத்தை நாம் அனுபவிக்கிறோம்.
காட்டில் மரம் வெட்டப்படுவதால் பசுமை குறைகிறது, நதிகள் வறண்டு விட்டன, ரசாயன உரங்களால் நமது உணவு, நீர், காற்று, விஷம் தோய்ந்தவைகளாகி விட்டன, மலைகள் சரிவதை காண்கிறோம், பூமி பிளக்கிறது, இவை யாவும் சமீப காலமாக நாம் காண்கிறோம், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நமது பாரதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இவற்றை சரி செய்யும் வழிமுறை அமைப்பது தான் ஒரே தீர்வு. தேசத்தின் வெவ்வேறு பகுதியின் தேவைகளை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்றாற்போல் ஒட்டுமொத்த செயல் திட்டத்தை அமைத்து அதை அந்தந்த பகுதியில் செயல்படுத்தினால், வெற்றி கிடைக்கும், சாதாரண மக்களாகிய நாம் நமது வீட்டில் மூன்று விஷயங்களில் சிறிய அளவு தொடக்கத்தை ஏற்படுத்தலாம்.
முதலில் தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியம். இரண்டாவது பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைப்பது, அதிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்த்தல், மூன்றாவது நம் வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் மரம் நடுதல், செடி வளர்த்தல், காடுகளை காத்தல், நம் நாட்டு மரங்களை வளர்த்தல். சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கை ரீதியான பிரச்சினை தீர நாள் பிடிக்கும். ஆனால் நாம் நமது வாழ்வில் தினசரி கடமையாக உடனடியாக தொடங்க முடியும்
பண்பின் அவசியம்
பண்பின் அவசியம் குறித்து மூன்று இடங்களில் கவனம், செயல் தேவை. முதலில் கல்விக்கூடங்களில் பண்பு பாடங்கள், பழக்கங்கள் நல்ல முறையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வி என்பது வெறும் வயிற்றை நிரப்பும் கருவியாக இருப்பதுடன், மாணவர்கள் பண்பில் மேம்படும் அவசியத்தையும் கவனத்தில் கொள்வதாக இருக்க வேண்டும். நம் நாட்டில் பண்பாட்டின் அருமையை சுருக்கமாக சொல்லும் சுபாஷிதம் ஒன்று உண்டு:
“மாத்ரு வத் பர தாரேஷு, பர த்ரவ்யேஷு லோஷ்ட்ட வத்,
ஆத்ம வத் சர்வ பூதேஷு, ய பஸ்யதி ஸ பண்டிதஹ”
(பெண்களை தாயாக பார்ப்பது. மற்றவர் செல்வத்தை தூசுக்கு சமமாக பார்ப்பது; அதாவது சொந்தமாக உழைத்து நல்ல வழியில் பொருள் சேர்த்தல்; எல்லா உயிரினங்களும் தன் போல என்று உணர்ந்து, பிறருக்கு துன்பமோ கஷ்டமோ தரக்கூடிய செயல் செய்யாமல் இருத்தல் … இவை போன்ற நற்குணங்கள் நிரம்பியவராக வாழ்பவரே தன்னைப் படிப்பாளியாக கருதலாம்).
புதிய கல்விக் கொள்கையில், பாடத்திட்டத்தின் வழியே பண்புக் கல்வி தர வர முயற்சிகள் தொடங்கியுள்ளன. ஆனால் தொடக்கக் கல்வி முதல் மேற்படிப்பு வரை ள ஆசிரியர்கள் அதற்கு உதாரணங்களாக திகழாத வரை பாடத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆதலால் ஆசிரியர்களின் பயிற்சிக்கு புதிய முறையை ஏற்படுத்துவது அவசியம்.
இரண்டாவது, சமுதாய சூழ்நிலை. ஊரில் சில பிரமுகர்கள்; அவர்களின் புகழ் காரணமாக மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அந்த பிரமுகர்களின் வாழ்க்கையிலும் இந்தப் பண்புகள் அனைத்தும் விளங்க வேண்டும். அவர்களும் பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிவர வேண்டும். இவ்வாறு ஊரில் பண்பு பரவ வேண்டும். சமூக ஊடக செயற்பாட்டாளர்களான அன்பர்கள் (Social Media influencers) அனைவருமே, “ஊடகம் இருப்பது சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த; உடைப்பதற்கு அல்ல; ஊடகம் நற்பண்புகளைப் பரப்ப வேண்டுமே அல்லாமல் தீயவற்றைப் பரப்பக் கூடாது’ என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் குழந்தை மூன்று முதல் 12 வயது வரை கல்வியின் முதல் படி ஏறுவதும் அதனால் சுபாவம் செம்மை ஆவதும் வீட்டில்தான். வீட்டில் பெரியவர்கள் நடந்து கொள்ளும் விதம், வீட்டின் சூழ்நிலை, வீட்டில் ஒருவருடன் ஒருவர் பரிவுடன் பேசிக்கொள்கிற பேச்சு இவை மூலம் இந்த படிப்பு நல்லபடியாக நிறைவேறுகிறது. நம்மில் ஒவ்வொருவரும் நமது வீட்டின் சூழலை கருத்தில் கொண்டு வாரம் ஒரு முறையாவது சந்திப்பு நடத்த தொடங்க வேண்டும். நம்முடைய விஷயங்கள் பற்றிய பெருமிதம், தேச பக்தி, அறவழி வாழ்க்கை, உயரிய கருத்துக்கள், கடமை உணர்வு போன்ற பண்புகள் இந்த சந்திப்புகளால் நாளாவட்டத்தில் நம்மில் படிந்து வரும்.
குடிமக்கள் கடமை
சமுதாயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதம் பண்பாட்டின் மற்றுமொரு வெளிப்பாடு. நாம் சமுதாயத்தில் ஒன்றாக வாழ்கிறோம், இணக்கமாக இருக்க சில சட்ட திட்டங்கள் உண்டு. காலத்திற்கு ஏற்றாற்போல் அவற்றில் மாற்றங்களும் நடக்கின்றன. ஆனால் இணக்கமாக வாழ அந்த சட்ட திட்டங்களை முழு மனதோடு கடைப்பிடிப்பது அவசியம். ஒன்றாக வாழ வேண்டுமெனில், நாம் அனைவரும் அடுத்தவர் விஷயத்தில், நன்னடத்தையும் கட்டுப்பாடும் கடைபிடிப்பது அவசியமாகிறது. சட்டங்களும் அரசியல் சாஸனமும் சமுதாய அளவிலான கட்டுப்பாடுதான். ஒன்றாக சுகமாக .வாழ்ந்து உயர்வடைய வேண்டும், சிதறிப் போகக் கூடாது என்பதற்கான விதிமுறையாக அரசியல் சாஸனத்தை பாரதத்தின் குடிமக்களாகிய நாம் நமக்கு நாமே வழங்கிக் கொண்டுள்ளோம். நாம் அனைவருமே அரசியல் சாஸனத்தின் முன்னுரையில் உள்ள இந்த வாக்கியத்தின் பொருளைப் புரிந்து கொண்டு, அது சொல்லும் கடமைகளை நிறைவேற்றி சட்டங்களை சரியானபடி பின்பற்றுவோம். சிறிதோ பெரிதோ எந்த விஷயத்திலும் சட்டப்படி நடப்போம். டோல் கட்டணம் இருக்கும். நமது வரிகளை நேரத்திற்கு செலுத்துவோம். தனிப்பட்ட, பொது கணக்கு வழக்குகளில் பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் தேவை. இதுபோன்ற பல தரப்பட்ட சட்டங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். சட்டங்களை வாசகப் படியும் சாரப் படியும் (லெட்டர் அண்ட் ஸ்பிரிட்) கடைபிடிப்போம்.
அரசியல் சாசனத்தில் முன்னுரை, வழிகாட்டிக் கோட்பாடு, குடிமக்கள் கடமை குடிமக்கள் உரிமை ஆகியவை உள்ளன. இவை பற்றி அனைத்து தரப்பிற்கும் எடுத்துச் சொல்லி வர வேண்டும்..
தனிநபர் ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் இரண்டும் சிறக்க வேண்டும். அதற்கு குடும்பம் தரும் பரஸ்பர நல்லுறவால் வாய்க்கும் கட்டுப்பாடு வேண்டும்; பரஸ்பர உறவில் புனிதம், மங்கலம், நல்லெண்ணம் தேவை. சமுதாயத்துடனான உறவில் தேசபக்தி, நம் சமுதாயம் என்ற உணர்வு ஆகியவற்றுடன் அரசியல் சாஸனத்தையும் சட்டங்களையும் மதிப்பது … இவை எல்லாமாக சேர்ந்து தனிநபர் ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் ஆகியவை அமைகின்றன. தேசத்தின் ஒற்றுமை, தேசப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை நிலைநாட்ட இந்த இரண்டும் ஒழுக்கங்களும் குறை ஏதுமின்றி முழுமை பெறுவது முற்றிலும் முக்கியமான விஷயம். தனிநபர் ஒழுக்கமும் தேசிய ஒழுக்கமும் அடையும் முயற்சியில் நாம் அனைவரும் விழிப்புடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
நம்மவற்றில் பெருமிதம்
இவை அனைத்தும் தொடர்ந்து பின்பற்ற பட தேவையான உத்வேகம் நமது (ஸ்வ) என்ற பெருமிதத்தால்தான் கிடைக்கும். நாம் யார்? நமது பாரம்பரியம் மற்றும் நமது வாழ்வின் லட்சியம் என்ன? பாரதியர்களாக, நம்மிடையே பல்வேறு வேற்றுமைகள் இருந்தபோதிலும், பண்டைய காலந்தொட்டு தொடரும் ஒரு பெரிய, அனைத்தையும் உள்ளடக்கிய, மனித குல அடையாளத்தின் தெளிவான வடிவம் என்ன? இவற்றையெல்லாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த அடையாளத்தின் மிகவும் நல்ல குணங்களை ஏற்றுக் கொண்டு பின்பற்றுவதத்தின் மூலம், அதன் பெருமை மனதிலும் புத்தியிலும் ஆழமாக பதிகிறது. இதுவே நம்முடையது என்ற பெருமிதத்தின் அடிப்படை. இந்த சுயபெருமிதம் தரும் உத்வேகமே நமது தன்னம்பிக்கைக்கும், உலகில் நாம் முன்னேறுவதற்கும் ஆவன செய்ய தூண்டுகோல். இதைத்தான் நாம் சுதேசி என்கிறோம். தேசியக் கொள்கையில் அதன் வெளிப்பாடு, பெருமளவில் சமூகத்தின் அன்றாட வாழ்வில் தனிநபர்களின் நடத்தையைச் சார்ந்தே அமைகிறது.