இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் – புனே – மூன்றாம்நாள் – 26.10.2024
வரலாற்றை மாற்றி எழுதிய நியூசிலாந்து
முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்துஅணி (முதல் இன்னிங்க்ஸ் 259, டெவன் கான்வே 76, ரச்சின் ரவீந்த்ரா 65, மிட்சல் சாண்ட்னர்33, வாஷிங்க்டன் சுந்தர் 7/59, அஷ்வின் 3/64, இரண்டாவது இன்னிங்க்ஸ் 255, டாம் லேதம்86, டாம் புளண்டல் 41, கிளன் பிலிப்ஸ் ஆட்டமிழக்காமல் 48, வாஷிங்க்டன் சுந்தர்4/56, அஷ்வின் 2/97, ஜதேஜா 3/72); இந்தியாஅணி (முதல் இன்னிங்க்ஸ்156, ஜெய்ஸ்வால் 30, கில் 30, ஜதேஜா38, மிடஸ்ல் சாண்ட்னர் 7/53, கிளன் பிலிப்ஸ் 2/26, டிம் சௌதீ 1/4; இரண்டாவது இன்னிங்க்ஸ் 245, ஜெய்ஸ்வால்77, ஜதேஜா 42, கில் 23, கோலி 17, வாஷிங்க்டன் சுந்தர் 21, அஷ்வின் 18, பும்ரா 10, சாண்ட்னர்6/104, அஜாஸ் படேல் 2/43, கிளன் பிலிப்ஸ் 1/60) நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில்வென்றது.
69 ஆண்டு கால வரலாற்றை புரட்டிப் போட்ட நியூசிலாந்து
69ஆண்டுகளுக்குப் பின் இந்திய மண்ணில்நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரைமுதன்முறையாக கைப்பற்றி வரலாற்று சாதனை செய்து இருக்கிறது. 1955இல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம்மேற்கொண்ட நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள்கொண்ட தொடரில் ஆடியது. அப்போது இருந்து இதுவரை இந்திய மண்ணில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது நியூசிலாந்து. தற்போது இந்திய மண்ணில் தனது 13 வது டெஸ்ட் தொடரில்பங்கேற்று இந்திய அணியை வீழ்த்தி உள்ளது. இந்த தொடரின் முதல்இரண்டு போட்டிகளையும் வென்று 2-0 என தொடரை கைப்பற்றிஇருக்கிறது நியூசிலாந்து அணி. இந்தத் தொடரின்முதல் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. அடுத்து புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. புனேவில் கிடைத்த இந்த வெற்றியே நியூசிலாந்துஅணி இந்திய மண்ணில் பெரும் நான்காவது டெஸ்ட் போட்டி வெற்றி ஆகும்.
இந்த தொடரை கைப்பற்றியதன்மூலம் பல வரலாற்று சாதனைகளைநிகழ்த்தியுள்ளது நியூசிலாந்து அணி. சுமார் 12 ஆண்டுகளாகசொந்த மண்ணில் 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்தது இந்தியா. வேறு எந்த அணியும்சொந்த மண்ணில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்திக்காமல் இருந்ததில்லை. அந்த பிரம்மாண்ட சாதனையைஇந்திய அணி படைத்து அதைதொடர நினைத்தது. ஆனால், அந்தச் சாதனையை முறியடித்ததோடு முதன்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது நியூசிலாந்து. மேலும், இந்தியாவில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய ஆறாவது அணி என்ற பெருமையையும்நியூசிலாந்து பெற்று இருக்கிறது.
நேற்றைய ஆட்டநேர முடிவில் 198/5 என்றஸ்கோரில் இருந்த நியூசிலாந்து அணி இன்று 9 ஓவர்கள் மட்டுமே விளையாடி மீதமுள்ள 5 விக்கட்டுகளையும்இழந்து 255 ரன் எடுத்தது. 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட்வந்தது. கிட்டத்தட்ட இரண்டரை நாள்கள் ஆட்டம் பாக்கியிருந்தது. அணித்தலைவர் ரோஹித்ஷர்மா (16 பந்துகளில் 8 ரன்), இளம் வீரர் ஜெய்ஸ்வால் (65 பந்துகளில் 77ரன்), ஷுப்மன் கில் (31 பந்துகளில் 23 ரன்), ரிஷப் பந்த் (ரன் அவுட்,பூஜ்யம் ரன்), விராட் கோலி (40 பந்துகளில் 17 ரன்), ஸர்ஃப்ராஸ் கான்(15 பந்துகளில் 9 ரன்) என முக்கியமான பேட்டர்கள் (ஜெய்ஸ்வாலைத் தவிர) அனைவரும் டெஸ்ட்மேட்சில் நீண்ட நேரம் நிலைத்து ஆடவேண்டும் என்ற அடிப்படை விஷயத்தை மறந்து ஆடினர். வாஷிங்க்டன்சுந்தர் (47 பந்துகளில் 21 ரன்) மர்றும் ரவீந்தர் ஜதேஜா (84 பந்துகளில்42 ரன்) இருவர் மட்டும் டெஸ்ட் மேட்ச் மனப்பான்மையுடன் ஆடினர். 60.2 ஓவர்களில் 245 ரன் எடுத்து இந்திய அணி தோவியைத்தழுவியது.
இந்த மேட்சில் 13 விக்கட்டுகள் எடுத்த மிட்சல்சாண்ட்னர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். உலக டெஸ் சாம்பியன்ஷிப் பொட்டியில்இந்திய அணி 62.82 புள்ளிகளுடன் இன்னமும் முதல் இடத்தில் இருக்கிறது. இருப்பினும் இறுதிப்போட்டியில் ஆடுவது சந்தேகம்தான்.