- Ads -
Home இந்தியா இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

இட ஒதுக்கீடு பயனைப் பெற மதமாற்றத்தை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

இட ஒதுக்கீடு நலன்களை பெற மத மாற்றத்தை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

இட ஒதுக்கீடு நலன்களை பெற மத மாற்றத்தை அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்துள்ளனர். இந்து முன்னணி அமைப்பு இந்தத் தீர்ப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு என்று குறிப்பிட்டு வரவேற்றுள்ளது.

கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறிய பெண் ஒருவர், தன்னை ஹிந்துவாகக் கூறி, தன்னுடைய ஒதுக்கீடு நலன்களைப் பெற முயற்சி செய்த வழக்கில், உச்ச நீதிமன்றம், இதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டதுடன், இந்த விதமான நடவடிக்கை, இட ஒதுக்கீடுக் கொள்கையின் சமூக நோக்கிலான மனோபாவத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டது.

நீதிபதிகள் பங்கஜ் மிட்டல் மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் வழங்கிய தீர்ப்பில், “இட ஒதுக்கீட்டு நலன்களைப் பெற மத மாற்றத்தை மேற்கொள்ளும் ஒருவரின் நோக்கம் சமூக நீதிக்கொள்கையை கேள்விக்கு உள்ளாக்கும்” என்று தெரிவித்தது.

மேலும் ” ஒவ்வொரு குடியுரிமையாளருக்கும் அவரது விருப்பத்திற்கேற்ப மதத்தை பின்பற்றும் உரிமை அரசியலமைப்பின் 25 வது பிரிவின் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது. ஆனால் இட ஒதுக்கீட்டு நலன்களைப் பெற வேண்டும் என்பதற்காகவே மத மாற்றம் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தது.

இந்த வழக்கில், புகாரளித்தவர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர் என்றும், ஹிந்துவாகக் கூறி, சாதிய ஒதுக்கீடு சான்றிதழ் பெற முயற்சி செய்தார் என்றும் நீதிமன்றம் கூறியது. “இத்தகைய இரட்டைத் தரவுகளை அங்கீகரிக்க முடியாது. இடஒதுக்கீடு சமூக நீதிக்கொள்கையின் அடிப்படையான நோக்கத்திற்குப் புறம்பாக இது இருக்கும்” என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ:  செங்கோட்டை: சூரசம்ஹார விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

இந்நிலையில், இந்துக்களின் உரிமையை உரத்துக் கூறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பு என்றும், கிறிஸ்தவ மதத்தைக் கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டதை இந்துமுன்னணி வரவேற்கிறது என்றும், அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கை:

புதுச்சேரியைச் சார்ந்த செல்வராணி என்பவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர். இவர் தன்னை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் (பட்டியல் சமுதாயம்) சார்ந்தவர் எனக் கூறி சாதி சான்றிதழ் கோரியுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி மாநில அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனை எதிர்த்து அவர் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதம் மாறியவர்களுக்கு இது போல் சாதி சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி அவரது வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து செல்வராணி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதியரசர் பங்கஜமிட்டல் நீதியரசர் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ALSO READ:  பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அதன் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டு அதனடிபடையில் மதம் மாறியதாக இருக்க வேண்டும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் அரசு வேலை வாய்ப்பிற்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுவதை ஏற்க முடியாது. இது அரசியலமைப்புச்சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை இந்து முன்னணி பேரியக்கம் அனைத்து இந்து மக்களின் சார்பாக மனதார வரவேற்கிறது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மதம் மாறியபிறகும் தங்களை இந்து எனக் கூறிக்கொண்டு மோசடியாக சலுகைகளை அனுபவித்து வருவதை தடுக்க வேண்டும் என இந்துமுன்னணி நெடுங்காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழகத்தில் சிலர் மதம் மாறிய பிறகும் தன்னை இந்து பட்டியல் சமுதாயத்தவர் என ஏமாற்றி சான்றிதழ் பெற்று உண்மையான இந்து பட்டியல் சமுதாய மக்களின் சலுகைகளை மோசடியாக அபகரித்து வருகின்றனர். இத்தகைய மோசடிக்கு தற்போது உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ALSO READ:  சபரிமலை 18ம் படியில் குரூப் போட்டோ எடுத்த விவகாரம்: போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

இந்நிலையில் மதம் மாறியவர்களுக்கு இந்து பட்டியலினத்தவர் என போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதன் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வநஐம் என்றும் உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்கேவேண்டிய உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் இந்துமுன்னணி வலியுறுத்துகிறது.

இந்து பட்டியலின மக்களின் உரிமைகளை உறுதி செய்து மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version