- Ads -
Home இந்தியா தில்லி சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு; ஈரோடு கிழக்கு தொகுதிக்கும்!

தில்லி சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிப்பு; ஈரோடு கிழக்கு தொகுதிக்கும்!

இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம். வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

தில்லி சட்டமன்றம்

தில்லியில் பிப்ரவரி 5ம் தேதி, 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல்.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் 10.012.25
வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 17.01.2025
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 18.01.2025
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 20.01.2025
தேர்தல் நாள் 05.02.2025
வாக்கு எண்ணிக்கை 08.02.2025

ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் அறிவிப்பு.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை.
வேட்புமனுதாக்கல் தாக்கல் செய்ய வரும் 17ம் தேதி கடைசி நாள்.
இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 20ம் தேதி வெளியாகும்.

தில்லி சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ALSO READ:  பிரதமர் மோடி, அண்ணாமலையை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டவரை கைது செய்க: பாஜக., ஆர்ப்பாட்டம்!

13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்கு மையங்கள் அமைக்கப்படும். 85 வயதை கடந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும். வருகிற 10-ந்தேதி மனுதாக்கல் தொடங்கும். 17-ந்தேதி வேட்புனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை 18-ந்தேதி நடைபறும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதியாகும். வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ந்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும்.

முன்னதாக, இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் என்பதை விரைவில் எட்டுவோம். வாக்களிப்பதிலும், பெண்களின் பங்கேற்பிலும் புதிய சாதனைகளை படைத்துள்ளோம்.

நான் அறிவிக்கும் கடைசி தேர்தல் தேதி இதுவாகும் தில்லியில் 83.5 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 71.7 பெண் வாக்காளரக்ள் உள்ளனர். மற்றவர்கள் 1261 பேர் உள்ளனர். குறிப்பிட்ட குழுக்களை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் தவறான சேர்த்தல்கள் அல்லது நீக்கங்கள் குறித்து வதந்திகள் பரப்பப் படுகின்றன. வாக்காளர் பட்டியல் முற்றிலும் வெளிப்படையானது. வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் முறையாகப் பின்பற்றப்பட்டது. எந்தவிதமான மோசடிக்கும் இடமில்லை.

ALSO READ:  சென்னைக்கு முதல் ஏசி புறநகர் ரயில்! டிக்கெட் விலை ‘அம்மாடியோவ்’!

ஜனநாயகத்தில் உள்ளார்ந்த கேள்வி கேட்கும் உரிமை உள்ளது. அனைத்து சந்தேகங்களையும் நீக்குவது தேர்தல் ஆணையத்தின் கடமை. தேர்தல் நடத்தப்படுவதில் 70 நடைமுறைகள் உள்ளன.

2020 பீகார் மாநிலத் தேர்தலுக்குப் பிறகு 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த தேர்தல்களில் 15 வெவ்வேறு கட்சிகள் தனிப்பெரும் கட்சிகளாக உருவெடுத்துள்ளன. படிவம் 7 இல்லாமல் வாக்காளர் பெயர் நீக்கம் செய்யப்படாது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் முழு வெளிப்பாடு மற்றும் ஆட்சேபனை தெரிவிக்க அரசியல் கட்டுகள் ஈடுபடுகின்றனர்.

வாக்குப்பதிவு நாளுக்கு 7-8 நாட்களுக்கு முன்புதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன, வேட்பாளர்களுக்கு அவர்களின் முகவர்கள் மூலம் ஒவ்வொரு செயல்முறையின்போதும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று நீதிமன்றங்கள் 42 சந்தர்ப்பங்களில் தீர்ப்பளித்துள்ளன, மோசடி குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை.

வாக்காளர் வாக்குப்பதிவு தரவை மாற்றுவது சாத்தியமற்றது, மாலை 5 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பது குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் மதிப்பை குறைக்க நினைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வெளிப்படுத்தல் எங்கள் முக்கிய தூண், விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் தரவுத்தொகுப்புகள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கின்றன.

ALSO READ:  முதல்வருக்கு பேராசிரியர் எடுத்துள்ள பாடம்!

வாக்கு இயந்திரம் குறித்து கேள்வி எழுப்புவது தேர்தலை தடம்புரள வைக்கும். ஏராளமான தரவுகள் சரிபார்க்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் எனவும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறும்.

இடைத்தேர்தலுக்காக வருகிற 10-ம் தேதி மனுதாக்கல் தொடங்கும். 17-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். வேட்புமனு மீதான பரிசீலனை 18-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 20-ம் தேதி எனவும் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதைத் தொடர்ந்து, ஈரோடு மாநராட்சி அலுவலகத்தில் மேயர், துணை மேயர் அறைகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அரசியல் தலைவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version