கேரள மாநிலம் குமுளியில் கள்ளநோட்டு கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்த போலீசார், 5 இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
தமிழக-கேரள எல்லையில் குமுளியில் உள்ள உணவகத்தில் உணவருந்திய ஒருவர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்துள்ளனர். அந்த நோட்டு கள்ளநோட்டாக இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர் அவரை போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் பாலக்காடு மாவட்டம் ஒற்றைப்பாலம் நகரை சேர்ந்த கிரீசன் என்பதும், இதேபோல் பல இடங்களில் கள்ள நோட்டுகளை மாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், 5 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதில் அவரது அண்ணன் சுகேசன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.