வறுமையில் தள்ளி அநீதி இழைக்கிறது பாரதிய ஜனதா அரசு என்று ப.சிதம்பரம் உணர்ச்சி வசப்பட்டு பேசினார்
புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.
அப்போது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. மக்களை வறுமையில் தள்ளி அநீதி இழைத்தது தான் பாஜக-வின் சாதனை என்றார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இப்போது வரை 2% பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வரவில்லை என கூறப்படுகிறது.
தற்போது திருப்பதி தேவஸ்தானத்திடம் சுமார் 30 கோடி வரை பழைய ரூபாய் நோட்டுக்கள் இருக்கிறது. இதில் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது இதை முழுமையாக கணக்கு எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எவ்வளவு பணம் முழுமையாக இருக்கிறது என்று சில நாட்களுக்குள் தெரியவரும். எனவே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தரும்படி தற்போது திருப்பதி தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதற்கு பதிலளித்துள்ள ரிசர்வ் வங்கி, இன்னும் பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளது.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஏன் திருப்பதி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ண செல்லக்கூடாது. ஏனெனில் RBI அதிகாரிகளை விட திருப்பதி கோயில் ஊழியர்கள் வேகமாக பணத்தை எண்ணுவர்… என்று கேலியாக பேசினார்.
மக்களாவது திருப்பதி கோயில் உண்டியலில் பணத்தை போட்டார்கள்… ஆனால்….? என்று நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.