திருப்பதி: திருப்பதி அருகே சூறைக்காற்று மழையால் கோயில் பந்தல் சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 4 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஆந்திரா மாநிலம் கடப்பாவில் உள்ள கோதண்ட ராமர் கோயிலில், நேற்றிரவு சீதா – ராம திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இதையொட்டி, அங்கு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால், பந்தல் திடீரென சரிந்து விழுந்தது. மின் கம்பிகளும் அறுந்ததால் கோயிலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த விபத்தில் நான்கு பக்தர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 52 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.